Published:Updated:

``கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பாது, ஏனெனில்..." -தோழர் நல்லகண்ணு

நல்லகண்ணு

கொள்கையிலோ கோரிக்கைகளிலோ இரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் கிடையாது. அடிப்படைக் கொள்கை ஒன்றுதான். கருத்து வித்தியாசங்கள் இருந்தால், அவற்றை மாற்றிக்கொள்ளலாம்

``கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பாது, ஏனெனில்..." -தோழர் நல்லகண்ணு

கொள்கையிலோ கோரிக்கைகளிலோ இரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் கிடையாது. அடிப்படைக் கொள்கை ஒன்றுதான். கருத்து வித்தியாசங்கள் இருந்தால், அவற்றை மாற்றிக்கொள்ளலாம்

Published:Updated:
நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டு, 2020-ம் ஆண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதையொட்டி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் ஜூனியர் விகடனில் தொடர்ச்சியாக வெளிவரவுள்ளன. விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2KTHQhN

இந்தியாவில் மிக மூத்த தோழர்களில் முக்கியமானவர் நல்லகண்ணு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர். இன்னோர் ஆச்சர்யம்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்ற 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதிதான் நல்லகண்ணுவும் பிறந்தார்.

நல்லகண்ணுவைச் சந்திக்க கே.கே.நகர் வீட்டுக்குச் சென்றோம். "நாகர்கோவில்ல எழுத்தாளர் பொன்னீலனுக்கு 80-வது பிறந்த நாள் விழா. அதுக்குப் போயிட்டு காலையில தான் வந்தேன்" என்றபடி வரவேற்றார்.

"இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடிவருகிறது. இந்தத் தருணத்தில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?"

"பழைய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களில் தோழர்கள் என்.சங்கரய்யா, தா.பாண்டியன், நான் ஆகிய மூன்று பேர் மட்டும்தான் இப்போது உயிருடன் இருக்கிறோம். சங்கரய்யாவுக்கு 98 வயதாகிறது. தா.பாண்டியனுக்கு 87 வயது. நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போது 'நம்ம கட்சி' என்றுதான் பேசிக்கொள்வோம். இந்தத் தருணத்தில் நான் சொல்ல விரும்புவது, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான்."

``கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பாது, ஏனெனில்..." -தோழர் நல்லகண்ணு

"அதற்கான தேவை இருக்கிறதா?"

"கொள்கையிலோ கோரிக்கைகளிலோ இரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் கிடையாது. அடிப்படைக் கொள்கை ஒன்றுதான். கருத்து வித்தியாசங்கள் இருந்தால், அவற்றை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அனுசரித்துப் போகலாம். இரண்டு கட்சிகளும் இணைவதால், கம்யூனிஸ்ட் இயக்கம் பலம்பெறும். இதையெல்லாம் தாண்டி, கம்யூனிஸ்ட் கொள்கையை ஆதரிக்கக் கூடியவர்கள் மத்தியில் பெரும்நம்பிக்கையை அது உருவாக்கும். அப்படிப்பட்ட அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி வருவார்கள்."

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"பல தியாகங்கள் செய்தும் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக கம்யூனிஸ்ட் இயக்கம் வளராதது ஏன்?"

"சாதியவாதம், மதவாதம், இனவாதம் போன்றவற்றை முன்னிறுத்துகிற கட்சிகள் எளிதாக வளர்ந்துவிடும். ஆனால், கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியை ஆதிக்கச் சக்திகள் ஒருபோதும் விரும்பாது. வகுப்புவாதத்துக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சமரசமின்றி போராடுவது கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான். 'என் நம்பர் ஒன் எதிரி கம்யூனிஸ்ட்கள். அவர்கள் சட்டமன்றத்துக்குள் வந்துவிட்டார்கள். அவர்களை அடக்கி வைத்துவிடுவேன்' என்று பகிரங்கமாக ராஜாஜி கூறினார். கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாததால் கம்யூனிஸ்ட்களுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த எத்தனை எதிர்ப்புகள் பாருங்கள். கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக மூடப்பழக்கங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதுபோல் பல சவால்களை கம்யூனிஸ்ட்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது."

``கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பாது, ஏனெனில்..." -தோழர் நல்லகண்ணு

> "நூற்றாண்டு கண்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இதுவரை சாதித்தது என்ன?"

> "கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்களால் தொழில் சூழல் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டுவரும் குற்றச்சாட்டு குறித்து..."

> "மத்திய ஆட்சியில் பா.ஜ.க வலுவாக அமர்ந்துவிட்டது. கம்யூனிஸ்ட்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன், நேரடி பேட்டி அனுபவத்தையும் ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்!" - மனம் திறக்கிறார் தோழர் நல்லகண்ணு https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-communist-senior-leader-r-nallakannu

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism