Published:Updated:

`நாம் தமிழர் மீது தாக்குதல்’ விவகாரத்தில் திமுக-வுக்கு எதிராகத் திரும்பிய கட்சிகள்! -பின்னணி என்ன?

ஸ்டாலின் - சீமான்
News
ஸ்டாலின் - சீமான்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஹிம்லர் பொதுக்கூட்ட மேடையில் தாக்கப்பட்டதற்கு அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமின்றி, திருமாவும் கண்டித்துள்ளது கவனிக்க வைத்திருக்கிறது.

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த பேச்சாளர் ஹிம்லர் மீது தி.மு.க-வினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளும் வைரலானது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை தேவை. ஆளுங்கட்சியினரைத் தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்தது ஜனநாயகப் படுகொலை. எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதை ஆளுங்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ``தி.மு.க-வின் சுயரூபம் தற்போது வெளிவருகிறது. மக்கள் இதற்கு சரியானப் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

பா.ம.க இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ``சகிப்புத்தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும்தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்றுள்ளார்.

அன்புமணி
அன்புமணி

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ``தகறாரில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்துக்கு கருத்துதான் எடுக்கவைக்கப்பட வேண்டுமே தவிர, வன்முறையில் ஈடுபடகூடாது” என்றார்.

திருமா
திருமா

இந்த விவகாரத்தில், எல்லாக் கட்சிகளும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகத் திரும்ப என்ன காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விசாரித்தோம். ``இது நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவானதில்லை, தி.மு.க-வுக்கு எதிரான நடவடிக்கை. கூட்டணியில் சரியான அங்கீகாரம் இல்லை என்பதை உணர்ந்துதான் திருமாவும் இவ்விஷயத்தில் பேசியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. பா.ம.க-வுக்கு ஜெய்பீம் விவகாரம் கிடைத்தது போல, நாம் தமிழருக்கு ஏதாவது ஒரு விவகாரம் தேவைபட்டது. அதனால், தி.மு.க-வின் அடிமடியான இஸ்லாமியர்களின் வாக்குகளிலேயே கைவைத்தார் சீமான். சிறைவாசிகள் விடுதலையில் முஸ்லிம்களை அரசு புறக்கணிப்பதாக தர்கா தோறும் பிட் நோட்டீஸ் கொடுத்தனர் நா.த.கட்சியினர். இதுதான் தி.மு.க-வை சூடாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுமட்டுமின்றி, முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசுகையில், மேடையிலேயே சீமான் செருப்பை எடுத்துக் காண்பித்துப் பேசுகிறார். இது தி.மு.க நிர்வாகிகளை மேலும் எரிச்சலடைய வைத்தது. சரியான நேரம் பார்த்திருந்தவர்கள், அரூரில் தாக்கிவிட்டனர். இனி இப்படிப் பேசினால் தாக்கத்தான் செய்வோம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க-வினர். ஆனால், அடிவாங்கினாலும் இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கிராஃப் சற்று உயர்ந்துகொண்டு செல்கிறது.

ஸ்டாலின் - சீமான்
ஸ்டாலின் - சீமான்

இது தெரிந்ததால்தான் இஸ்லாமிய சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க முன்னாள் நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. உடனுக்குடன் அரசும் நடவடிக்கை எடுத்தாலும், மேலும் மேலும் இருதரப்புக்குமான மோதல் தொடரத்தான் செய்கிறது. எதிர்க்கட்சிகள் மொத்தமும் ஒன்று திரள்வதைப் பார்த்த தி.மு.க தலைமை, சீமானை இப்போது கண்டுகொள்ள வேண்டாம் என்று உத்தரவும் இட்டுள்ளதாம்” என்றனர்.