Published:Updated:

நங்கவள்ளி: சுயேச்சைக்காக மல்லுக்கட்டிய திமுக - அதிமுக; இறுதியில் நிறுத்தப்பட்ட பேரூராட்சித் தேர்தல்!

நங்கவள்ளி பேரூரட்சித் தேர்தல்

சுயேச்சை கவுன்சிலரின் ஆதரவுக்காக நடந்த பிரச்னையால், பேரூராட்சித் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நங்கவள்ளி: சுயேச்சைக்காக மல்லுக்கட்டிய திமுக - அதிமுக; இறுதியில் நிறுத்தப்பட்ட பேரூராட்சித் தேர்தல்!

சுயேச்சை கவுன்சிலரின் ஆதரவுக்காக நடந்த பிரச்னையால், பேரூராட்சித் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நங்கவள்ளி பேரூரட்சித் தேர்தல்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகம் முழுவதும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது ஆளுங்கட்சியான தி.மு.க. எதிர்க்கட்சியான அ.தி.மு.க மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலுள்ள சேலம் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தி.மு.க பெரும்பான்மையான இடங்களைப் பிடித்திருக்கிறது. அதேவேளையில் அ.தி.மு.க ஒருசில பேரூராட்சிகளில் அதிக எண்ணிக்கையில் கவுன்சிலர்களைப் பிடித்திருக்கிறது. அந்தப் பேரூராட்சிகளில் எப்படியாவது தலைவர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர் அ.தி.மு.க-வினர். அதற்கு எந்தவொரு வாய்ப்பும் அமைந்துவிடக் கூடாதென தி.மு.க-வினரும் தீவிரமாகக் காய்நகர்த்திவந்தனர். அப்படி நங்கவள்ளி பேரூராட்சியில் இரு கட்சிகளும் மல்லுக்கட்டி சண்டை போட்டு நிற்க, அந்தப் பேரூராட்சிக்கான தேர்தலே தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வனவாசி பேரூராட்சி
வனவாசி பேரூராட்சி

இது தொடர்பாக அ.தி.மு.க தரப்பினரிடம் பேசினோம். ``தேர்தல் நடந்து முடிந்த நாளிலிருந்தே தி.மு.க-வினர் எங்களது வெற்றியை தட்டிப் பறிப்பதற்கான உள்ளடி வேலைகளைச் செய்தனர். குறிப்பாக, வெற்றிபெற்ற கவுன்சிலர்களைத் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென மிரட்டியும், இல்லையென்றால் கடத்திக்கொண்டு சென்றுவிடுவோம் எனவும் அச்சுறுத்திவந்தனர். இந்த நிலையில், நங்கவள்ளி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க 2, பா.ம.க 2, பா.ஜ.க 1, தி.மு.க கூட்டணி 6 மற்றும் சுயேச்சைகள் 4 வார்டுகளைப் பிடித்தனர். இதில் சுயேச்சையாக வெற்றிபெற்ற மூன்று கவுன்சிலர்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அ.தி.மு.க ஆதரவு கவுன்சிலர்களின் எண்ணிக்கை எட்டு என்றானது. அதையடுத்து, எங்ககிட்ட எட்டு கவுன்சிலர்களோட ஆதரவு இருக்கு. ஆனா, தி.மு.க-வினர் ஏழு கவுன்சிலர்களை மட்டுமேவெச்சுருக்காங்க. அதனால, தலைவர் ஆவதற்கான வாய்ப்பு அவங்களுக்கு இல்லை. அதன் காரணமாகவே தி.மு.க-வைச் சேர்ந்த ரத்தினவேல், சேகர் ஆகியோர் எங்களுக்கு ஆதரவளித்த சுயேச்சை கவுன்சிலர்களை தலைவர் தேர்ந்தெடுப்பின்போது மிரட்டினர். அதனால் நாங்கள் கேள்வி எழுப்ப, இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது" என்றனர்.

இது குறித்து தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ``நாங்க எந்தப் பிரச்னையும் பண்ணலைங்க. எங்களுக்கு ஆதரவு தரேன்னு சொல்லிருந்த சுயேச்சை கவுன்சிலர்கள்கிட்டதான் நாங்க பேசினோம். ஆனா, அ.தி.மு.க-வினர் அதில் ஏதாவது அரசியல் செஞ்சு தலைவருக்கான தேர்தலை நிறுத்தணும் என்பதற்காகவே இது மாதிரி தேவையில்லாத பிரச்னையைக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க" என்றனர்.

இதேபோ வனவாசி பேரூராட்சியிலும் தலைவர் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இரு தரப்பும் அடுத்தமுறையாவது சுமுகமாகத் தேர்தலை எதிர்கொள்வார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!