Published:Updated:

அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி `டம்மி போஸ்ட்' - சொல்கிறார் நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்
News
நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க., மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் அமைப்பு. ஆனால் இன்று ஆதாய சூதாடிகளின் கையில், அதிகாரத் தரகர்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு அந்தக் கட்சி தன்னுடைய ஆன்மாவை இழந்துவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், ஆத்துமேடு அண்ணா திடலில் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு த.மு.மு.க சார்பில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றுப் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தி.மு.க., அ.தி.மு.க., தி.க-வில் பொதுச்செயலாளர் பதவி மட்டுமே இருந்துவருகிறது. இதுவே திராவிட இயக்கங்களுடைய முறையாக இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளெல்லாம் கிடையாது. எனவே, இல்லாத பதவிக்கு யாரும் போட்டியிட மாட்டார்கள். இது டெல்லியில் தேர்தல் ஆணையமும், பி.ஜே.பி-யும் இன்றைக்கு அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்த எடுபிடிகளுக்குக் கொடுத்திருக்கிற சன்மானம். ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை. அதனால்தான் யாரும் போட்டியிடவில்லை.

கூட்டம்
கூட்டம்

அ.தி.மு.க மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் அமைப்பு. ஆனால், இன்று ஆதாய சூதாடிகளின் கையில், அதிகாரத் தரகர்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு அந்தக் கட்சி தன்னுடைய ஆன்மாவை இழந்துவிட்டது. அதனால் இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி டம்மி போஸ்ட். இதை யாரும் மதிக்கவே மாட்டார்கள். இது ஒரு நாள் செய்திதானே தவிர, இதற்குப் பின்னால் எந்தச் சரித்திரமும் இருப்பதாக நான் கருதவில்லை.

தமிழ் சினிமாவுக்கு ஒருநாள் உலக அங்கீகாரத்தை வாங்கித் தருகிற வல்லமையுள்ள கலைஞன் கமல்ஹாசன். அவருடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு ஒரு கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலம் பெற்று வந்ததற்கு காலமகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz