Published:Updated:

``ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணி தனித்து நிற்க வேண்டும்!" - சவால்விடும் நத்தம் விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன்
News
நத்தம் விஸ்வநாதன்

``அதிமுக-வில் 95 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் இருக்கிறார்கள். நாங்கள்தான் அதிமுக எனக் கூறிக்கொண்டு பேப்பர் அறிக்கையை மட்டும் வைத்து அரசியல் செய்பவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்." - நத்தம் விஸ்வநாதன்

``ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணி தனித்து நிற்க வேண்டும்!" - சவால்விடும் நத்தம் விஸ்வநாதன்

``அதிமுக-வில் 95 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் இருக்கிறார்கள். நாங்கள்தான் அதிமுக எனக் கூறிக்கொண்டு பேப்பர் அறிக்கையை மட்டும் வைத்து அரசியல் செய்பவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்." - நத்தம் விஸ்வநாதன்

Published:Updated:
நத்தம் விஸ்வநாதன்
News
நத்தம் விஸ்வநாதன்

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொது​க்கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், நேற்றிரவு வத்தலக்குண்டு நகர அ.தி.மு.க சார்பில் நகரச் செயலாளர் பீர்முகமது தலைமையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது​. 

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

இந்தக் கூட்டத்தில் ​பங்கேற்ற ​அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன்​, ``ஈரோட்டில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அமோக வெற்றிபெறும்​.​ அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டிருப்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்​​கியிருக்கின்றனர்​. ​​

​அ.தி.மு.க-​வில் 95 சதவிகிதம் பேர்​​​​ எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் இருக்கிறார்கள்​.​ நாங்கள்தான் அ.தி.மு.க எனக் கூறிக்கொண்டு பேப்பர் அறிக்கையை மட்டும் வைத்து அரசியல் செய்பவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்​.​ அப்போதுதான் அவர்களுடைய மரியாதை என்னவென மக்கள் தெரியவைப்பார்கள்​.​ தி.மு.க-வுடன் கைகோத்துக்கொண்டு அந்தக் கட்சிக்கு வெஞ்சாமரம் வீசுவோருக்கு இந்த இடைத்தேர்தல் தக்கப் பாடம் புகட்டும்" என்றார். 

நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன்

​நத்தம் விஸ்வநாதன் ஓ.பி.எஸ் அணியைக் குறிப்பிட்டுப் பேசினாலும், மேடையில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை உச்சரிக்கவில்லை. இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணி தனித்து நிற்க வேண்டுமென அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மேடையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் சினிமா நடிகர் கஞ்சா கருப்பு​,​ நிலக்கோட்டை ​எம்.எல்.ஏ தேன்மொழி ​உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.