Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே 10 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது ஆம் ஆத்மி.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே 10 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது ஆம் ஆத்மி.

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

இந்தியாவின் வலிமை மிகுந்த பேச்சாளர்!

ஆகஸ்ட் 3-ம் தேதி அன்று மாநிலங்களவையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவைப் பேச அழைத்த அவைத்தலைவர் வெங்கைய நாயுடு, ``உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி’’ என்றார். இதைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி வரிச் சுமை உள்ளிட்டவை குறித்துப் பேசிய வைகோ, ``நீங்கள் அனுமதித்த நேரத்துக்குள்ளாகவே நான் பேசி முடித்துவிட்டேன்’’ என்றார். அப்போது வெங்கைய நாயுடு, ``இந்த அவையிலுள்ள இளம் தலைமுறையினர் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டிலுள்ள வலிமை மிகுந்த பேச்சாளர்களில் வைகோவும் ஒருவர். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை’’ என்று பாராட்ட, மேசைகளைத் தட்டி அவைத்தலைவரின் கருத்தை ஆமோதித்தனர் சக எம்.பி-க்கள்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

குஜராத்திலும் வலுவிழக்கும் காங்கிரஸ்!

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே 10 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது ஆம் ஆத்மி. கூடவே, `ஆம் ஆத்மி வெற்றிபெற்றால், ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம்’ என்றும் அறிவித்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மியின் அதிரடிகளை அடுத்து, ஆளும் பா.ஜ.க-வும் தேர்தல் வேலைகளை வேகப்படுத்தியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஹர்திக் படேல் பா.ஜ.க-வுக்குத் தாவிய நிலையில், இப்போது மேலும் இரண்டு காங்கிரஸ் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் நரேஷ் ராவல், எம்.பி ராஜு பர்மர் ஆகிய இருவரும் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி பா.ஜ.க-வில் இணையப்போவதாக அறிவித்திருக்கின்றனர். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் வலுவிழந்துவருவதால், எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தும்கூட பறிபோக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

“மிரண்டுவிட்டது பா.ஜ.க!”

ஜூலை 31 நள்ளிரவில், பண மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத்தைக் கைதுசெய்தது அமலாக்கத்துறை. மூன்று நாள்கள் விசாரணைக்குப் பிறகு, ஆகஸ்ட் 4 அன்று, அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை. அப்போது, ``என்னை ஜன்னல்கள் இல்லாத அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். அங்கு காற்றோட்டமே இல்லை’’ என்று நீதிபதியிடம் புகாரளித்தார் ராவத். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``அது ஏ.சி அறை. அதனால்தான் ஜன்னல்கள் இல்லை’’ என்று பதிலளித்தார். ``ஆம், அது ஏ.சி அறைதான். ஆனால் எனது உடல்நலக் கோளாறு காரணமாக என்னால் ஏ.சி-யைப் பயன்படுத்த முடியவில்லை’’ என்றிருக்கிறார் ராவத். இதையடுத்து, அவருக்கு நல்ல காற்றோட்டமுள்ள அறையை ஒதுக்குவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தது அமலாக்கத்துறை. இதற்கிடையில், சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத், ``பால் தாக்கரேவின் உண்மைத் தொண்டரான சஞ்சய் ராவத் ஒருபோதும் ஊழலில் ஈடுபட மாட்டார். பா.ஜ.க அவரைக் கண்டு மிரண்டுவிட்டது’’ என்று பேட்டியளித்திருக்கிறார்.