Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

சசி தரூர் - பிரகாஷ் ஜவடேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
சசி தரூர் - பிரகாஷ் ஜவடேகர்

NH பிட்ஸ்

டெல்லி தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனைக்கு அதிகம் கட்டணம் வசூலிப்பதைக் குறைக்குமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் கோரிக்கைவைத்திருக்கிறது டெல்லி பா.ஜ.க. மருத்துவமனைகளும் ஆய்வகங்களும் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதனால், மற்ற நகரங்களைவிட நான்கு மடங்கு அதிகம் செலவு செய்ய டெல்லி மக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஒருவரின் கொரோனா பரிசோதனைக்கு, தற்போது ரூ.2,400 கட்டணம் வசூலிப்பதாகக் கூறுகிறார் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர். மேலும், அண்டை மாநிலங்களிலுள்ள குறைவான கட்டணங்களையும் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். இதையொட்டி, கட்டணம் சம்பந்தமாக மறுபரிசீலனை செய்யப்போவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நேஷனல் ஹாட் பிட்ஸ்

* மத்தியப் பிரதேசச் சட்டமன்ற இடைத்தேர்தலில், ‘டாப்ரா’ தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் இமார்டி தேவியின் பிரசாரத்தை ஒரு நாள் (நவம்பர் 1-ம் தேதி மட்டும்) தடைசெய்தது தேர்தல் ஆணையம். தேர்தல் பிரசாரங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஒழுங்கீனமாக முறைதவறிப் பேசுவது, அவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடுவது, பெண்களை இழிவுபடுத்துவது எனத் தேர்தல் விதிகளை மீறிச் செயல்பட்டதாக அவருக்கு அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிட்டு, குட்டுவைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* ஜார்கண்ட் மாநில பா.ஜ.க தலைவர் தீபக் பிரகாஷ் மீது அவமதிப்பு வழக்கு பதிவுசெய்திருக்கிறது ஜார்கண்ட் காவல்துறை. சமீபத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த தீபக் பிரகாஷ், ``அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், ஆளும் ஹேமந்த் சோரன் ஆட்சி கவிழ்ந்துவிடும். அரசுக்கு தைரியமிருந்தால், என்னை 24 மணி நேரத்தில் கைதுசெய்யுங்கள்” என்று மிரட்டல் விடுத்தார். ஹேமந்த் அரசுக்கு எதிராக சகட்டுமேனிக்கு வீரவசனம் பேசிவந்தார். சூடான காவல்துறை, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக தீபக் பிரகாஷ் மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* பீகார் மாநிலம், முங்கர் பகுதியில், துர்கா பூஜைக்குக் குழுமிய மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட தடியடி, அம்மாநில பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. `பொதுமக்கள்தான் முதலில் அமைதியைக் குலைத்தனர்’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட, கூட்டத்தைக் கட்டுப்படுத்த நின்ற பாதுகாவலர்கள் லத்தி சார்ஜ் செய்த வீடியோ ஒன்று வைரலானது. அதில் போலீஸாரின் அத்துமீறல் பரவலாக விமர்சிக்கப்படவே அந்தப் பாதுகாவலர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய உத்தரவிட்டார் முங்கர் எஸ்.பி மானாவிஜித் சிங் திலோன். “சட்டம் அனைவருக்குமானது. சட்டப்படி என்ன நடவடிக்கையோ அதேதான் காவலர்கள் மீதும் மேற்கொள்ளப்படும்” என்று உறுதியளித்திருக்கிறார் அவர்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* “புல்வாமா தாக்குதல், பிரதமர் இம்ரான் கான் அரசின் சாதனை!” என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறியது சமீபத்தில் சர்ச்சையானது. “பாகிஸ்தானே ஒப்புக் கொண்ட பிறகு, புல்வாமா தாக்குதலில் பா.ஜ.க அரசை விமர்சித்த காங்கிரஸ் கட்சி, மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறினார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “காங்கிரஸ் என்ன காரணத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும், அரசு ராணுவ வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியதற்கா... அல்லது தேசியப் பேரழிவை அரசியலாக்காமல் பேரணி நடத்தியதற்கா... அல்லது நம் தியாகிகளின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததற்கா?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* அஸ்ஸாம் மாநில அரசு, குடிமைப் பணித் தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருநங்கையர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கியிருக்கிறது. ஆண் / பெண் / திருநங்கையர் என மூன்று பாலினங்களையும் தேர்வுக்கான விண்ணப்பத்தில் தனித்தனியாக நிரப்பும்படி அறிவித்திருந்தது. இந்தநிலையில், 42 திருநங்கையர்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். பால் சமத்துவத்துக்கான முயற்சியாக இதைச் செயல்படுத்தியிருக்கிறது அஸ்ஸாம் மாநிலம்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* “மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்குக் கூச்சப்படக் கூடாது!” எனப் பேசியிருக்கிறார் ஆம் ஆத்மியைச் சேர்ந்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா. ஹரியானா மாநிலத்திலுள்ள அசோகா பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசும்போது, “அரசு நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயுள்ள பிணைப்பு எப்படியிருக்கிறது என்ற புரிதல் அனைவருக்கும் அவசியமானது. நாட்டில் மாற்றம் தேவை என்று நினைப்பவர்கள் அனைவரும் அரசியலுக்கு வருவதில் தயக்கமோ, கூச்சமோ காட்டக் கூடாது. மாணவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசி அனல் கிளப்பியுள்ளார்.