Published:Updated:

போதைப்பொருள் விவகாரம்; தேவேந்திர பட்னாவிஸ் Vs நவாப் மாலிக் - முற்றும் மோதல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேவேந்திர பட்னாவிஸ் Vs நவாப் மாலிக் - முற்றும் மோதல்
தேவேந்திர பட்னாவிஸ் Vs நவாப் மாலிக் - முற்றும் மோதல்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அவர் மனைவி அம்ருதா ஆகியோர் போதைப்பொருள் வியாபாரி ஜெய்தீப் ராணாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்சையைக் கிளப்பியிருக்கிறார்.

மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக், நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேமீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது நவாப் மாலிக், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார்.

போதைப்பொருள் வியாபாரி ஜெய்தீப் ராணாவுடன் பட்னாவிஸ்
போதைப்பொருள் வியாபாரி ஜெய்தீப் ராணாவுடன் பட்னாவிஸ்

பட்னாவிஸ் ஆட்சிக்காலத்தில்தான் மகாராஷ்டிராவில் போதைப்பொருள் வியாபாரம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். அதோடு, தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா போதைப்பொருள் வியாபாரி ஜெய்தீப் ராணா என்பவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் நவாப் மாலிக் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``போதைப்பொருள் வியாபாரியுடன் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி எடுத்துக்கொண்ட புகைப்படம் குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

நவாப் மாலிக்கின் இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்திருக்கும் தேவேந்திர பட்னாவிஸ், ``அமைச்சர் நவாப் மாலிக்கின் ட்விட்டர் பதிவு அவரின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. தீபாவளிக்குப் பிறகு நவாப் மாலிக்குக்கு மாஃபியா கும்பலுடன் இருக்கும் தொடர்பை வெளிக்கொண்டு வரும்விதமாக முக்கியத் தகவல் ஒன்றை வெளியிடவிருக்கிறேன். இது தொடர்பான தகவல்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடமும் பகிர்ந்துகொள்வேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நதிகளைப் பாதுகாக்கும் தொண்டு நிறுவனம் ஒன்று என் மனைவியை நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்திருந்தது.

ஆர்யன் கான் வழக்கு: பணம் பறிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட சமீர் வான்கடேவே விசாரிப்பார் என அறிவிப்பு!
தேவேந்திர பட்நவிஸ் Vs நவாப் மாலிக் - முற்றும் மோதல்
தேவேந்திர பட்நவிஸ் Vs நவாப் மாலிக் - முற்றும் மோதல்

அதில் என் மனைவியுடன் நபர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருடன் நானும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். மற்றபடி எனக்கோ என் மனைவிக்கோ அந்த நபருடன் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. என் மனைவியுடன் அந்த நபர் எடுத்துக்கொண்ட படத்தை மட்டும் நவாப் மாலிக் வெளியிட்டிருக்கிறார். இதிலிருந்து, அவரது மனநிலை தெளிவாகப் புரிகிறது. மாஃபியாக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்னைப் பற்றிப் பேசக் கூடாது. அதற்கான ஆதாரங்களை தீபாவளிக்குப் பிறகு வெளியிடுவேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு