Published:Updated:

``திமுக Vs பாஜக உண்மையல்ல; பாமக-வே எதிர்க்கட்சி... பாஜக சின்னக் கட்சி" - அன்புமணி ராமதாஸ் அதிரடி

அன்புமணி ராமதாஸ் பேட்டி - தைலாபுரம்

"சாதி என்பது இருக்கிறது... இனியும் இருக்கப்போகிறது. அதில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. சாதியைவைத்து அடக்குமுறை செய்வது மட்டும்தான் தவறு." - அன்புமணி.

``திமுக Vs பாஜக உண்மையல்ல; பாமக-வே எதிர்க்கட்சி... பாஜக சின்னக் கட்சி" - அன்புமணி ராமதாஸ் அதிரடி

"சாதி என்பது இருக்கிறது... இனியும் இருக்கப்போகிறது. அதில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. சாதியைவைத்து அடக்குமுறை செய்வது மட்டும்தான் தவறு." - அன்புமணி.

Published:Updated:
அன்புமணி ராமதாஸ் பேட்டி - தைலாபுரம்

பா.ம.க-வின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், நேற்று (30.05.2022) தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற அரசியல் பயிலரங்க நிகழ்ச்சியில் பங்குபெற்று கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அதற்கு முன்பாக, தனது பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அரசியல் பயிலரங்க நிகழ்ச்சியில் தலைமையேற்றுப் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "கடந்த ஏழு மாதங்களில் மாவட்டச் செயலாளார்களிடம் சொன்ன ஒன்றுமே நடக்கவில்லை. அப்போ, எதற்கு மாவட்டச் செயலாளர்கள் பதவி... இதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது தம்பிகளே... உழைத்தால் மட்டுமே நிலைக்க முடியும். நான் தயங்கவே மாட்டேன், ஏனெனில், 2026-ல் நாம் ஆட்சிக்கு வர வேண்டும்.

அன்புமணி - ராமதாஸ் - ஜி.கே.மணி
அன்புமணி - ராமதாஸ் - ஜி.கே.மணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் 25 கலைக்குழுக்கள் மூலமாக, ஒவ்வொன்றாக எளிமையாக நாம் அரசியல் பயிற்சி அளித்துவருகிறோம். நம்முடைய அரசியல் பயிற்சிக்கு வராதவர்கள், அந்தப் பொறுப்பிலே இருக்க மாட்டார்கள். மாவட்டம் முதல் கிளைகள் வரையில் பல அடுக்குகளாகச் செயலாளர் பொறுப்புகள் உள்ளன.

உதாரணமாக, கிளை மற்றும் ஒன்றியச் செயலாளர்கள்... 'குடுகுடுப்பைக்காரர்களைப்போல வேஷம் போட்டுக்கொண்டு நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஆட்சி மாறுது... ஆட்சி மாறுது... அன்புமணி ஆட்சிக்கு வருகிறார்' என்று ஒவ்வொரு தினமும் காலையில் 4 மணிக்கு கிராமங்களில் சொல்லிக்கொண்டே போக வேண்டும்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பூம்பூம் மாட்டுக்காரர்களைப்போல போக வேண்டும். அதேபோல, சமூக வலைதளங்களின் மூலமாக அன்புமணி பற்றிய தகவல்களையும், நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது பற்றியும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆகவே, இப்பயிற்சியை யாரும் சுமை என்று நினைக்க வேண்டாம். அது உங்களைப் பக்குவப்படுத்துவதற்குத்தான். பதவிக்காக காக்கா பிடிக்கவேண்டிய வேலையே இல்லை" என்றார்.

அன்புமணி
அன்புமணி

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், "இன்று தமிழகத்தில் முக்கியப் பிரச்னைகளாக இருப்பவை மது, போதைப்பொருல்கள், ஆன்லைன் சூதாட்டம், கலாசாரச் சீரழிவு போன்றவைதான். இதற்காக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் காப்பாற்றுங்கள் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல மதுவிலக்கு கொள்கையை எப்போது தமிழக அரசு அமல்படுத்தும் என்றும் தெளிவுப்படுத்த வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க அரசு வெற்றிபெறுவதற்கு முன்பு, கொள்கைரீதியாக பூரண மதுவிலக்கை ஏற்றிருந்தார்கள். இப்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க அரசு, இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் மதுவிலக்கு செயல் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் தற்கொலை செய்துகொள்வதாக டி.ஜி.பி நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதையேதான் நாங்களும் கடந்த இரண்டு ஆண்டுக்காலமாகச் சொல்லி, வலியுறுத்திவருகிறோம். அரசாங்கம் என்ன செய்துகொண்டிருந்தது... ஏன் அரசு தயங்குகிறது என்றும் தெரியவில்லை. அப்படியென்றால், பொதுமக்கள் உயிர்மீது அரசுக்குக் கவலையே இல்லையா... ஆன்லைன் சூதாட்டம், ஒரு மோசமான சமூகப் பிரச்னை. எனவே ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக தமிழக முதலமைச்சர் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, அதற்குத் தடைவிதிக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

சென்னை மாநகராட்சி தெருக்களில் சாதிப் பெயர்கள் நீக்கப்படுவதை இரண்டுவிதமாகப் பார்க்கலாம். சுதந்திரப் போராளிகளில் பலருக்கு, அவர்களுடைய சாதிப் பெயரை வைத்துத்தான் அவர்களின் அடையாளமே இருக்கிறது. அதை எந்த அடிப்படையில் பார்ப்பீர்கள்... அனைத்துக்கும் ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க முடியாது. சாதி என்பது இருக்கிறது... இனியும் இருக்கப்போகிறது. சாதியில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. சாதி என்றால் 'கெட்ட வார்த்தை' என்று பல பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சாதியை வைத்து அடக்குமுறை செய்வது மட்டும்தான் தவறு. மற்றபடி சாதி அடிப்படையில் வழிபாடு, உடை, பழக்க வழக்கம், திருமணம முறை, உணவு முறை போன்றவையெல்லாம் இருக்கின்றன. மதம், மொழியின் அடிப்படையில் எவ்வளவோ அழகான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சாதி என்றால் கெட்ட வார்த்தை என்று அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அது தவறு.

சாதியைச் சொல்லி அடக்குமுறை, பிரிவினைதான் இருக்கக் கூடாது. எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் சொல்லிவருகிறோம். ஆகவே, அந்தக் கண்ணோட்டத்திலும் அரசு அதைப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஊடகத்தைப் பற்றி விமர்சித்திருப்பது தவறு. பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிர்வாகச் சீர்திருத்தம் நிறைய செய்திருக்கிறார்கள். அதேநேரத்தில் மொழியைப் பற்றிய பல சர்ச்சைகள் அவருடைய ஆட்சியில் இருந்துள்ளன. இந்தியாவில் தேசியத்துக்கு, மாநிலத்துக்கு என்று மட்டுமே என எந்த மொழியும் கிடையாது. அலுவல் மொழி, இணைப்பு மொழிகள்தான் இருக்கின்றன. இதில்... இந்த மொழிதான் பெரியது, இந்த மொழி சிறியது என்று ஏதும் கிடையாது.

முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமர் மோடி
முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

அரசியலமைப்பின்படி பார்த்தால் 22 மொழிகளும் ஒன்றுதான், முக்கியம்தான். 'அதிகமாகப் பேசும் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்பது தவறு. அப்படியென்றால், உலகிலேயே பழைமையான மொழி தமிழ்தான் என்னும்போது நீங்கள் தமிழை கற்றுக்கொள்ளுங்கள். ஆகவே யாரும், எதையும் திணிக்கக் கூடாது. தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து ஓரிரு கொலைகள் நடந்துவருகின்றன. காவல்துறை, முதலமைச்சரின் துறை. ஆகவே, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எங்களது நோக்கம் 2026-ல் பா.ம.க ஆட்சி தமிழகத்தில் நடைபெற வேண்டும். அதற்கேற்ப யூகங்களையும், யுத்திகளையும் வருகின்ற தேர்தல் நேரத்தில் கடைப்பிடிப்போம். 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற முன்னெடுப்புக்கும், 'பாமக 2.0' என்பதற்கும் உண்டான வித்தியாசத்தைப் பொறுத்திருந்து பாருங்கள். தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பா.ம.க-தான். நாங்கள் வேண்டுமென்றே யாரையும் எதிர்த்து பேசுவது கிடையாது. மக்கள் பிரச்னை சார்ந்து எதிர்ப்போம்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி
Fb

தமிழகத்தில், தி.மு.க Vs பா.ஜ.க என்று ஒரு பொய்யான கருத்தை பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால், அது உண்மை அல்ல. பா.ஜ.க-வைப் பொறுத்தமட்டில் தேசிய அளவில் அது மிகப்பெரிய கட்சி, ஆளுங்கட்சி. ஆனால், தமிழகத்தில் அது ஒரு சின்னக் கட்சிதான். அவர்களுக்கு தி.மு.க-வை எதிர்த்து வரும் பலம் இல்லை. அந்த பலம் பா.ம.க-வுக்கு மட்டுமே உள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism