Published:Updated:

"திரையுலகில் முக்கிய இடம்", "மீம்ஸுக்கு சிக்கமாட்டேன்" - இவர்களின் உறுதிமொழிகள்!

பொது இடம் என்றுகூடப் பாராமல் தொண்டர்களைத் திட்டிவிடுவேன். இது தவறான பழக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தப் புத்தாண்டி லிருந்தாவது இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்

'முரட்டு சிங்கிள்' பட்டத்தைத் துறக்கத் துடிக்கும் 90'ஸ் கிட்ஸ்களில் ஆரம்பித்து, 'சட்டப் புத்தகத்தை அட்டை டு அட்டை திருத்தி முடிச்சாச்சு... அடுத்து சக்கர்பெர்க் புக்கை (ஃபேஸ்புக்) திருத்த ஆரம்பிக்கலாமா ப்ரோ...' என்று கூலாக அடுத்த 'ட்வென்டி ட்வென்டி' ஆடக் காத்திருக்கும் அமித்ஷா - மோடி வகையறா அரசியல்வாதிகள் வரை அனைவருக்குமே வெரைட்டியான புத்தாண்டு உறுதிமொழிகள் வருடம்தோறும் உண்டு! இந்த வரிசையில், 'புத்தாண்டில் எதை விட்டீங்க... புதுசா எதைத் தொட்டீங்க..?' என்று தமிழக அரசியல்வாதிகளின் ஜாலியான உறுதிமொழிகளைச் சொல்லச்சொல்லிக் கேட்டோம்... http://bit.ly/36itYX5

நாஞ்சில் சம்பத்:

"2019-ல் வெளிவந்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தில் 'யாரடா மக்கள்' என நான் பேசியிருந்த டயலாக்தான் இன்றைக்குத் தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களின் ரிங்டோன். தவிர, 'சம்பவம்' என்ற ஒரு புதிய படத்தில் போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். எனவே, 2019 எனக்குச் சிறப்பான ஆண்டு.

"திரையுலகில் முக்கிய இடம்", "மீம்ஸுக்கு சிக்கமாட்டேன்" - இவர்களின் உறுதிமொழிகள்!

சினிமா வாய்ப்புகளுக்காக நான் யாரிடமும் போய் நிற்கவில்லை. கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புக்கும்கூடக் காலம் கடந்துவிட்டது. ஆனாலும், '2020-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில், முக்கியமான ஒரு இடத்தைப் பிடிக்க' உறுதி பூண்டிருக்கிறேன். அடுத்து, வெப் சீரிஸிலும் நடிகராக ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். தவிர, புத்தகங்கள் எழுதி வெளியிடவும், கனடாவுக்குப் பயணப்படவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்!'' மேலும் படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/36itYX5

பொன்.ராதாகிருஷ்ணன்:

"2021-ல் தமிழக பா.ஜ.க அங்கம் வகிக்கிற கட்சிதான் ஆட்சி அமைக்கும். அதற்கான முயற்சியை 2020-லேயே தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது புத்தாண்டு உறுதிமொழி!

"திரையுலகில் முக்கிய இடம்", "மீம்ஸுக்கு சிக்கமாட்டேன்" - இவர்களின் உறுதிமொழிகள்!

அடுத்து, என்னை எல்லோருமே 'ஏன் எப்போதும் சீரியஸாகவே இருக்கிறீர்கள்...' என்று கேட்டுவருகிறார்கள். எனக்கும் எல்லோரையும் போல கலகலப்பாக இருக்க ஆசைதான். இனிமேல், கல்லூரி நாள்களில் இருந்ததைப்போல ஜோவியலாக என்னை நான் மாற்றிக்கொள்ள முடிவெடுத்திருக்கிறேன்.''

அமைச்சர் செல்லூர் ராஜு

''நான் ரொம்பவும் முன்கோபி. கட்சி வேலைகளில் யாராவது சுணக்கம் காட்டினால், பொது இடம் என்றுகூடப் பாராமல் தொண்டர்களைத் திட்டிவிடுவேன். இது தவறான பழக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தப் புத்தாண்டி லிருந்தாவது இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.

"திரையுலகில் முக்கிய இடம்", "மீம்ஸுக்கு சிக்கமாட்டேன்" - இவர்களின் உறுதிமொழிகள்!

அடுத்து, எப்பவோ முடிந்துபோன தெர்மாகோல் விவகாரத்தைக்கூட இப்போதுவரை 'உள்ளூர் விஞ்ஞானி' என்று மீம்ஸ்களில் கிண்டலடித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது எகிப்திலிருந்து இறக்குமதியான வெங்காயத்தைப் பற்றிப் பேசும்போது, 'இதில் காரம் அதிகமாக இருப்பதால் கொழுப்பைக் கரைக்கும். அதனால் இதயத்துக்கு நல்லது' என்று சொல்லிவிட்டேன். இதைக்கூட, 'ஈஜிபுத்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது - சொல்கிறார் விஞ்ஞானி செல்லூர்ராஜு' என்று மீம்ஸ் போட்டுக் கலாய்க்கிறாங்க.

அதனால் உறுதியாக ஒரு முடிவெடுத்து விட்டேன்... '2020-ம் ஆண்டிலிருந்து அதிகமாக மீம்ஸ் வரக்கூடிய அளவுக்குப் பேசி மாட்டிக் கொள்ளாமல், வார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்று.''

டி.ராஜேந்தர்:

'' 'மியூசிக்கல் லவ் ஸ்டோரி' ஒன்றைத் தற்போது படமாக்கிவருகிறேன். படத்தின் பாடல்களுக்கான மெட்டமைத்தல், செட்டமைத்தல் என பிஸியாக இருக்கும்போதுதான், திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தேர்தல் வேலை வந்தது. அதில் சிறியதொரு வெற்றியை இறைவன் எனக்குக் கொடுத்துள்ளான். 2020-ம் ஆண்டு திரைத்துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சி வரவேண்டும். அதற்கான உழைப்பில் மட்டுமே என் கவனம் இருக்கிறது. மற்றபடி அரசியலைப் பற்றி நோ டயலாக்!

"திரையுலகில் முக்கிய இடம்", "மீம்ஸுக்கு சிக்கமாட்டேன்" - இவர்களின் உறுதிமொழிகள்!

வாழ்க்கையில் நான் வேகமாக ஓடிப் பார்த்து விட்டேன். நான் கடந்துவந்த பாதையை இப்போது திரும்பிப் பார்க்கும்போது, 'வேகத்தை விட விவேகம்தான் வாழ்க்கையில் முக்கியம்' என்று உணர்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் வழியைத்தான் புத்தாண்டிலிருந்து கடைப்பிடிக்க முடிவெடுத்திருக்கிறேன். எது நடந்தாலும் அது இறைமயம்! படபடப்பு, பதைபதைப்பு எதுவும் இல்லாமல் வாழ்க்கை அமைதியாகப் போகிறது... எல்லாம் இறைமயம்!''

- இவர்களுடன் துரைமுருகன், மன்சூர் அலிகான், தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் கே.எஸ்.அழகிரி ஆகியோரது உறுதிமொழிகளையும் ஆனந்த விகடன் இதழில் முழுமையாக அறிய > விட்டதும் தொட்டதும்! https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-nadu-politicians-share-about-their-new-year-resolutions

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு