Published:Updated:

`நான் நிர்பலா அல்ல, சப்லா... !’- மக்களவையில் கொதித்த நிர்மலா சீதாராமன்

சாமானிய மக்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் மத்திய அரசின் நோக்கம் - நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கார்ப்பரேட் வரிச் சட்டங்கள் திருத்த மசோதா அண்மையில் மக்களவையில் நிறைவேறியது. அந்தக் கூட்டத்தில், ``கார்ப்பரேட்டுகளுக்கு வரியைக் குறைத்து, ஏழைகளுக்கு வரியைக் கூட்டியிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பலமிழந்துவிட்டார். சாமானியர்கள் மீதான வரிவிதிப்பைக் கடுமையாக்கி, கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்கும் அளவுக்குத்தான் நிதியமைச்சரின் பலம் இருக்கிறது.

`நடப்பு நிதியாண்டிலேயே விற்பனை'- ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் குறித்து நிர்மலா சீதாராமன்!

இப்போது அவர் நிர்மலா இல்லை, நிர்பலா (பலமில்லாதவர்)" என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுதரி கிண்டலடித்தார். நிர்மலா சீதாராமன் சுதந்திரமாகச் செயல்படவில்லை என்று மக்களவை கூட்டத்தில் அவர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

ரஞ்சன் சவுதரி
ரஞ்சன் சவுதரி

இதை மறுத்துப் பேசிய நிர்மலா சீதாராமன், "தான் இன்னும் பலத்துடன்தான் இருக்கிறேன். அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்கும் அரசாகத்தான் எங்களின் அரசு இருக்கிறது. யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாகப் பணியாற்றுகிறோம். முடிவுகளால் விளையும், சாதக பாதகங்களை, அதிலிருக்கும் நிறை குறைகளை கலந்து ஆலோசித்துதான் இறுதியாக முடிவெடுக்கப்படுகிறது.

மக்களின் நலன் கருதியே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது. சாமானிய மக்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் மத்திய அரசின் நோக்கம். வீண்பழி சுமத்துபவர்கள், பலமில்லாத நிதி அமைச்சர் என்று என்னை விமர்சிப்பவர்களும் நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான கருத்துகளை என்னிடம் பகிர்ந்துகொள்ளலாம்" என்று ஆவேசப்பட்டார்.

`கார்ப்பரேட் வரி குறைப்பால், முதலீடுகள் பெருகும்!' - மக்களவையில் நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து பேசிய அவர், ``தான் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் சப்லாதான்" என்று கூறினார். சப்லா என்றால் பலமிக்கவர்கள், அதிகாரமிக்கவர்கள் என்று அர்த்தம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ரஞ்சன் சவுதரி கிண்டலடித்ததற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சவுதரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள். ஆனால், தனது வார்த்தைகள் தவறு என்றால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிக்கொள்ளுங்கள் என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.