Published:Updated:

`அவர் எப்படி கட்சியில் சேர்ந்தார் தெரியுமா?'- பிரசாந்த் கிஷோர் குறித்து நிதிஷ் சொன்ன ரகசியம்

நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ் - பிரசாந்த் கிஷோர் ( twitter )

செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷின் பேச்சு இருவருக்கும் இடையே உள்ள மனஸ்தாபத்தை வெளிக்கொண்டுவருவது போல் அமைந்தது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜே.டி.யு) தேசிய துணைத் தலைவராக இருந்துவருகிறார் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர். இந்தப் பதவியை அவருக்குக் கொடுத்தவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். 2015 தேர்தலில் வெற்றிபெற்றதற்கு பரிசாக இந்தப் பதவியை அவருக்கு கொடுத்தார் நிதிஷ். இந்த நிலையில் நிதிஷுக்கும், பிரசாந்துக்கும் சமீப காலமாக உரசல் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அதற்கு காரணம் பி.ஜே.பி. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜே.டி.யு அங்கம் வகித்துவரும் நிலையில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பி.ஜே.பியையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
twitter

இது இரு கட்சிக்கும் இடையில் மனஸ்தாபத்தை ஏற்படுத்தியது. வரும் நவம்பரில் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும், அடுத்த மாதம் நடக்கவுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இப்படியான நிலையில் பிரசாந்த் கிஷோர் பேச்சை இரு கட்சித் தலைவர்களும் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பிரசாந்த் கிஷோரை வெளிப்படையாக தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார் நிதிஷ் எனக் கூறப்படுகிறது.

"ஒரு பேச்சுத் துணைக்கு மட்டுமே பிரசாந்த் கிஷோர்!" - துரைமுருகன் சிறப்புப் பேட்டி

டெல்லி பிரசாரத்துக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் லிஸ்ட்டில் பிரசாந்த் பெயர் புறக்கணிக்கப்பட்டது. சில நாள்களுக்கு முன்பாக ராஜ்கீரில் நடந்த ஜே.டி.யு கட்சித் தலைவர்களுக்கான பயிற்சி முகாமிலும் பிரசாந்த் கலந்துகொள்ளாதது என சில சம்பவங்கள் இதற்கு உதாரணமாக சொல்லப்பட்டது. இதற்கிடையே, பீகாரில் நிதிஷ் குமாரின் இல்லத்தில் இன்று ஜே.டி.யு கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்தத் தகவல் உண்மை என்கிற வகையில் இன்றைய கூட்டம் அமைந்துள்ளது. எதிர்பார்த்தது போலவே பிரசாந்த் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
twitter

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷின் பேச்சும் இருவருக்கும் இடையே உள்ள மனஸ்தாபத்தை வெளிக்கொண்டுவருவதுபோல் அமைந்தது. சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``யாரோ ஒருவர் ட்வீட் செய்கிறார், அவர் ட்வீட் செய்யட்டும். இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஒருவர் விரும்பும்வரை கட்சியில் இருக்கட்டும் என்று விரும்பினால் இருக்கலாம். அல்லது செல்ல வேண்டும் என்று விரும்பினால் செல்லலாம். பிரசாந்த் கட்சியில் இருப்பாரா இல்லையா என்பதை அவரிடம் கேளுங்கள். அவர் மனதில் வேறு ஏதேனும் இருக்க வேண்டும்? ஒருவேளை வெளியேற வேண்டும் என்று கூட விரும்பலாம்.

`சூப்பர் ஹிட் க்ளப்... பவர் சென்டர் பிரசாந்த் கிஷோர்!' -ஆர்.எஸ்.பாரதி போட்ட ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

அவர் இருந்தாலும் ஓகேதான். சென்றாலும் ஓகேதான். உங்களுக்கு அவர் எப்படி கட்சியில் சேர்ந்தார் என்று தெரியுமா? அவரை சேர்க்குமாறு அமித் ஷா என்னிடம் கேட்டுக்கொண்டார். அமித் ஷா கேட்டுக்கொண்டதன்பேரில் நான் பிரசாந்தைக் கட்சியில் சேர்த்தேன். ஆனால், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். அவர் கட்சியில் இருக்க விரும்பினால் அவர் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை, கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அவர் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளுக்காக பணியாற்றுகிறார். வங்காளத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜியுடனும் டெல்லித் தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கும் அவர் உத்திகளை உருவாக்குகிறார் என்பதை நான் அறிவேன்" எனக் கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
twitter

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் இரண்டு தொகுதியில் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. இந்த நிலையில், டெல்லித் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக பிரசாந்தின் ஐபேக் நிறுவனம் பணியாற்றுவருகிறது என்று கூறப்படுகிறது. இது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக இருப்பதால் இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி!
அடுத்த கட்டுரைக்கு