Published:Updated:

``ரஜினியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” - கோவையில் வைகோ பேச்சு

வைகோ - ரஜினி

`எதிர்க்கட்சிகளையும் பேசவிட்டால்தான் ஆரோக்கியமான நாடாளுமன்றம் உருவாகும்’ என்று வெங்கைய நாயுடு கூறிய கருத்தைப் பற்றிக் கேட்டபோது, `அவரின் கருத்து சரிதான்’ என்றார்.

``ரஜினியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” - கோவையில் வைகோ பேச்சு

`எதிர்க்கட்சிகளையும் பேசவிட்டால்தான் ஆரோக்கியமான நாடாளுமன்றம் உருவாகும்’ என்று வெங்கைய நாயுடு கூறிய கருத்தைப் பற்றிக் கேட்டபோது, `அவரின் கருத்து சரிதான்’ என்றார்.

Published:Updated:
வைகோ - ரஜினி

கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய வைகோ, ``மதிமுக புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் தமிழக அரசியல் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துவருகிறது. மேலும் கொரோனாவுக்குப் பிறகான எனது சுற்றுப்பயணத்தை மதிமுக-வின் ஜிப்ரால்டர் கோட்டையான கொங்கு மண்டலத்திலிருந்து தொடங்குகிறேன். மதிமுக., திமுகவுடன் லட்சியரீதியாக உடன்பாடு கொண்டிருக்கிறோம். நாங்கள் இணைந்து சனாதனம் மற்றும் ஏகாதிபத்திய பாசிச சிந்தனைகளைக்கொண்ட கட்சிகளை வீழ்த்துவோம். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினின் ஆட்சி, கொள்கை மற்றும் லட்சியரீதியான ஆட்சி. எங்களிடையே நல்ல புரிதலும், ஒன்றிணைப்பும், தோழமையும் இருக்கின்றன. அந்த வகையில் நாங்கள் வெற்றிபெற்று எங்களது பயணத்தைத் தொடர்வோம்” என்று கூறினார்.

``ரஜினியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” - கோவையில் வைகோ பேச்சு

அவரிடம் ஜி.எஸ்.டி விலை உயர்வு குறித்துக் கேட்டபோது, ``ஜி.எஸ்.டி-யால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். உணவுப் பண்டங்களுக்குக்கூட ஜி.எஸ்.டி விதித்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டி-யால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அம்பானிகளும், அதானிகளும் அல்ல. இந்த விலை உயர்வால் கூலித் தொழிலாளர்களும், மாதச் சம்பளம் வாங்குபவர்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்” என்றார்

மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை குறித்துக் கேட்டபோது, ``இந்த விலை உயர்வால் அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்கிறது. இதனால் அடித்தட்டு மக்கள் பாதிப்படைகின்றனர். மேலும் இந்த விலை உயர்வு, மத்திய மோடி அரசின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்குகிறது என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`எதிர்க்கட்சிகளையும் பேசவிட்டால்தான் ஆரோக்கியமான நாடாளுமன்றம் உருவாகும்’ என்று வெங்கைய நாயுடு கூறிய கருத்தைப் பற்றிக் கேட்டபோது, ``அவரின் கருத்து சரிதான். ஆளுங்கட்சி கூச்சல் போட்டு எதிர்க்கட்சிகளைப் பேசவிடாததால்தான் எதிர்ப்பு உருவாகிறது. இந்தக் கருத்தை அவர் நடுநிலையோடு கூறியிக்கிறார். இதை ஆளுங்கட்சி பின்பற்றினால் நல்லது” என்றார்.

வைகோ
வைகோ

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று நாள்கள் தேசியக்கொடி ஏற்றச் சொல்லியிருப்பது பற்றிக் கேட்டபோது, ``தேசியக்கொடியைத்தானே ஏற்றச் சொல்லியிருக்கிறார்கள், கட்சிக்கொடியை அல்லவே... 75 ஆண்டுகள் சுதந்திர தினத்தை ஞாபகப்படுத்தும் முயற்சியாக தேசியக்கொடியை ஏற்றச் சொல்லியிருப்பது வரவேற்கப்படவேண்டிய விஷயம்” என்றார்.

ஆளுநருடனான நடிகர் ரஜினிகாந்தின் சந்திப்பைப் பற்றிக் கேட்டபோது, ``ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை. ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். மறுநாள் உறுப்பினரைச் சேர்க்க சொல்லிவிட்டேன் என்கிறார். பிறகு அனைவரையும் வரச் சொல்கிறார். அனைவரும் வந்த பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை என்று பால்கனியிலிருந்து கையசைத்துச் சென்றுவிடுகிறார். அதனால் அவரைச் சீரியஸாக எடுத்துக்க வேண்டாம்” என்றார்.