Published:Updated:

`என் சொத்து மதிப்பில் ஒரு ரூபாய்கூட கூடாது!'- மக்கள் முன் மீண்டும் ஜோதிமணி உறுதி

"அதிகாரிகள் என்னோடு வராமல், அறைக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இப்படி இருந்தால், எப்படி என்னால் மக்கள் நலனில் அக்கறை செலுத்தமுடியும்?" என்று கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜோதிமணி
ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் நகராட்சிக்குட்பட்ட அரிக்காரம்பாளையம், கோதூர், வேலுசாமிபுரம், வையாபுரி நகர், பெரிய குளத்துப்பாளையம், வாங்கபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜோதிமணி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி
ஜோதிமணி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கும் மட்டுமல்லாது, அவரோடு பயணித்த அரவக்குறிச்சித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கும் ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பளித்தனர்.

Vikatan

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜோதிமணி, "கரூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்து, என்னை நாடாளுமன்ற உறுப்பினராக மிகப்பெரிய வெற்றியை பெறவைத்தீர்கள். இதற்கு காரணம், வாக்காளர்களாகிய நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை, அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே, என்மீது நீங்கள் வைத்துள்ள அந்த நம்பிக்கைக்கு கடைசி வரை உங்களுக்கு நன்றி உள்ளவாக இருந்து, மக்கள் பணியாற்றுவேன்.

ஜோதிமணி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி
ஜோதிமணி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

ஒரு கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக மக்களை சந்திக்க செல்லும்போது, அரசு அதிகாரிகள் உடன் வருவதில்லை. கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை, விராலிமலை, வேடச்சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும்போது, அம்மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் என்னோடு சேர்ந்து மக்களை சந்திக்க வருகிறார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் சட்டமன்றத் தொகுதி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றில் பொதுமக்களை சந்திக்க செல்லும்போது, அதிகாரிகள் அறைக்கு உள்ளே ஒளிந்து கொள்கிறார்கள். என்னோடு வருவதில்லை.

இது தேர்தல் காலம் கிடையாது என்பதை உணராமல், ஆளும் கட்சியின் துணையுடன் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மக்களை சந்தித்து, மத்திய அரசிடம், மாநில அரசிடம் போராடி மக்களுக்கு தேவையான திட்டங்களையும், சலுகைகளையும் பெற்றுத் தர பாடுபடுவேன். இன்னும் ஓராண்டு கழித்து வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்த ஆட்சியின் அராஜகப்போக்கு முற்றுப்புள்ளி வைக்க, நீங்கள் மீண்டும் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

ஜோதிமணி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி
ஜோதிமணி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

தேர்தல் நேரத்தில் மிக முக்கியமான வாக்குறுதியாக, 'எனது சொத்து கணக்கை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வெளியிடுவேன்' என தெரிவித்திருந்தேன். அதுபோல, தற்போது வெளியிட்டுள்ளேன். மீண்டும் அடுத்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட எனக்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கினால், அப்போதும் இதே சொத்துப்பட்டியல்தான் இருக்கும் என்ற நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் உங்களுக்கு அளிக்கிறேன். அதில் இருந்து ஒருரூபாய்கூட எனது சொத்தில் ஏறிஇருக்காது" என்று அதிரடியாக பேசினார்.