Published:Updated:

`அமைச்சர் தம்பிதான் மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற வைத்தார்!' - நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு

ஆர்ப்பாட்டத்தில் நாம்தமிழர் கட்சியினர்

``அமைச்சர் கீதாஜீவனோட தம்பி போட்டுயிடுறதுனால எங்க கட்சியின் வேட்பாளரை மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர்” என நாம்தமிழர் கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் ராஜசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

`அமைச்சர் தம்பிதான் மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற வைத்தார்!' - நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு

``அமைச்சர் கீதாஜீவனோட தம்பி போட்டுயிடுறதுனால எங்க கட்சியின் வேட்பாளரை மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர்” என நாம்தமிழர் கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் ராஜசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

Published:Updated:
ஆர்ப்பாட்டத்தில் நாம்தமிழர் கட்சியினர்

தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 28-ம் தேதி தொடங்கிய வேட்பு மனுதாக்கல் பிப்ரவரி 4-ம் தேதி மாலையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், 5-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டன. 7-ம் தேதியான இன்று வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் கொண்ட உள்ளாட்சி பதவிகளுக்கு அ.தி.மு.க, தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சுயேச்சைகளும் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினர்
நாம் தமிழர் கட்சியினர்

20-வது வார்டில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி போட்டியிடுகிறார். இவர், மகளிர்நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் உடன் பிறந்த சகோதரர். இவரை எதிர்த்து அதே வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோபி என்ற மாடசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். கோபியை தி.மு.க-வினர் மிரட்டி வாபஸ் பெறச் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ராஜசேகர், மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சாருஸ்ரீயை சந்தித்து புகார் மனு அளித்தார். தொடர்ந்து அவர் தி.மு.க வேட்பாளர் ஜெகன் பெரியசாமியை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகர், ``தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டில் தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் ஜெகன் பெரியசாமி, அமைச்சர் கீதாஜீவன் தம்பி. ஊருக்குள் தனக்கிருக்கும் செல்வாக்கினைப் பயன்படுத்தி அதே வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் கோபியை வேட்பு மனுத்தாக்கல் செய்த நாளில் இருந்தே ஜெகனும் அவர் ஆதரவாளர்களும் மிரட்டி வந்தனர். அவர் தொழில் நடத்தி வரும் மெக்கானிக் கடை முன்பாக சோடா பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்கள் கட்சி வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதையடுத்து உறவுக்காரர்களின் மூலமும் எச்சரிக்கை தொணியை கையாண்டு உயிர் பயத்தைக் காட்டியுள்ளனர்.

மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் கூறிய நாம்தமிழர் கட்சியினர்
மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் கூறிய நாம்தமிழர் கட்சியினர்

20-வது வார்டில் கவுன்சிலராக வெல்லப்போவது தி.மு.க-வா? நாம் தமிழரா? என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து, எங்கள் கட்சி வேட்பாளரை கடத்திச் சென்று வேட்பு மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். அவரின் வேட்பு மனுவை முன் மொழிந்த நபரையும் மிரட்டி வேட்பு மனுவை வாபஸ் பெறச் செய்துள்ளனர். தற்போது வரை எங்கள் கட்சியை சேர்ந்த 2 பேரின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. இது தி.மு.க-வின் உச்சகட்ட அராஜக போக்கு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism