Published:Updated:

``ஆன்டி இந்தியன், அப்பத்தா இந்தியன் எனச் சொல்லி காலி செய்யப் பார்க்கிறார்கள்!'' - சீமான் ஆதங்கம்

சீமான்

``திராவிடக் கட்சிகள் அறிவிப்பது எதுவும் வளர்ச்சித் திட்டங்கள் அல்ல கவர்ச்சித் திட்டங்கள். இது ஒருவகையான ஏமாற்று மட்டுமே'' என்கிறார் சீமான்.

``ஆன்டி இந்தியன், அப்பத்தா இந்தியன் எனச் சொல்லி காலி செய்யப் பார்க்கிறார்கள்!'' - சீமான் ஆதங்கம்

``திராவிடக் கட்சிகள் அறிவிப்பது எதுவும் வளர்ச்சித் திட்டங்கள் அல்ல கவர்ச்சித் திட்டங்கள். இது ஒருவகையான ஏமாற்று மட்டுமே'' என்கிறார் சீமான்.

Published:Updated:
சீமான்

சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது மயங்கி விழுந்த சீமான், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீட்டில் சிலநாள்கள் ஓய்வெடுத்து வந்தார். தற்போது மீண்டும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருப்பவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்..,

PM Modi
PM Modi

``பா.ஜ.க ஆட்சியில் நாடு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே?''

``எது வளர்ச்சி என்று அவர்கள் விளக்கம் சொல்லவேண்டும். கல்வி, உணவு, மருத்துவம், போக்குவரத்து, இராணுவம் என அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு வளர்ச்சி என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது.

தோட்டா முதல் பீரங்கி வரை அனைத்து ஆயுதங்களையும் வெளிநாட்டில் வாங்கிவைத்துக்கொண்டு, நீங்கள் யாரிடம் சண்டை போட்டு எங்களை காப்பாற்றப் போகிறீர்கள்?

இந்தக் கேள்வியை நாம் கேட்டால், நம்மை தேசத் துரோகி என்று சொல்லிவிடுவார்கள். ஆன்டி இந்தியன், அப்பத்தா இந்தியன் எனப் பேசி நம்மைக் காலிசெய்துவிடுவார்கள். நாட்டையும் மக்களையும் பற்றி சிந்திப்பவர்களுக்கு பொருளாதாரம் குறித்து அக்கறை இருக்கும். ஆனால், கடவுளையும் மதத்தையும் பற்றிச் சிந்திப்பவர்களுக்கு நாட்டின்மீதும் மக்களின்மீதும் கவலையே இருக்காது. நெருக்கடி அதிகமானால், மீண்டும் ராமரைக் கையில் எடுப்பார்கள்''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``இரண்டு கட்சிகளும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்திருக்கிறார்கள், ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே சாலைகள் சரியில்லை. பிரதான சாலையை விட்டு உள்ளே சென்றால் சாலைகள் சவக்குழியாக இருக்கிறது. தடையற்ற மின்சாரத்தை, இலவச கல்வியை, மருத்துவத்தை இவர்களால் தரமுடியவில்லை. சுத்தமான குடிநீரை விநியோகம் செய்யமுடியவில்லை. தரமான கல்வியை அரசு இலவசமாக கொடுத்துவிட்டால் பஸ் பாஸை மாணவர்களே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், பஸ் பாஸை இலவசமாக்கிவிட்டு கல்விக்கு பத்து லட்சம் கட்ட வைப்பதுதான் இவர்களின் மாடல். நாங்கள் பட்டினியாகக் கிடந்து செத்துவிட்டால், கட்டையில் எரிக்காமல் கரண்டில் எரிப்பது வளர்ச்சி அல்ல. இவர்கள் அறிவிப்பது எதுவும் வளர்ச்சித் திட்டங்கள் அல்ல கவர்ச்சித் திட்டங்கள். இது ஒருவகையான ஏமாற்று மட்டுமே''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னணியில்தானே இருக்கிறது?''

``ஆமாம். அதேவேளை மற்ற மாநிலங்களில் இருக்கின்ற வளத்தைவிட என் மாநில வளத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுதானே முக்கியம். இந்தியாவின் பொருளாதாரத்தை நிறைப்பதில் என் மாநிலம்தானே இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனக்கு நிலம், காடு, மலை, நீர் என எல்லா வளமும் இருக்கிறது. உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கலாம். ஒரு வளமும் இல்லாத சிங்கப்பூரே உலகின் பல நாட்டு இளைஞர்களுக்கு வேலை கொடுக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் என்ன நிலைமை இருக்கிறது. நீங்கள் ஏன் சிங்கப்பூருடன் தமிழ்நாட்டை ஒப்பிடவில்லை?''

அண்ணாமலை
அண்ணாமலை

``தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வருகிறதா?''

`` அது ஒரு கற்பிதம். அதற்கான தேவையே இங்கில்லை. இந்தியாவையே ஆளக் கொடுத்து நாட்டைப் பிச்சக்கார நாடாக்கி, பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளி, வளரும் நாடுகள் பட்டியலிலிருந்தே நாட்டைத் தூக்கியவர்களுக்கு இங்கு என்ன தேவை இருக்கிறது?''

``ஆனால், தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக பா.ஜ.க குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறதே?''

``குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லையே. தீர்வு காண வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என தஞ்சாவூரில் போராட்டம் நடத்துகிறார்கள். கர்நாடகாவை ஆள்வதும் பா.ஜ.க.,தான், மத்தியில் அதிகாரத்தில் இருப்பதும் பா.ஜ.க.,தான். பிறகு எதற்கு அந்தப் போராட்டம். அது நாடகம். அதிகாரமற்ற எளிய பிள்ளைகளான நாங்கள் போராடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. அவர்கள் போராடுவது ஏமாற்றுவேலை''

''தி.மு.க-வை விமர்சிப்பதில் சீமானின் இடத்தை அண்ணாமலை பிடித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறதே?''

``நாங்கள் கொள்கை அளவில் திராவிடத்தை விமர்சிக்கிறோம். அண்ணாமலை செய்திக்காக, விளம்பரத்துக்காக விமர்சிக்கிறார் அதற்கும் இதற்கும் வேறுபாடு இருக்கிறது.''

ராமதாஸ்
ராமதாஸ்

``வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``நீண்டகாலமாக மருத்துவர் ஐயா போராடி வருகிறார். அடுத்ததாக நான் பேசிவருகிறேன். இட ஒதுக்கீடு ரத்தானதை சிலர் வரவேற்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் அது தவறு. நமக்கு சாப்பாடு வேண்டுமானால் நாம் போராட வேண்டும். அடுத்தவனுக்குக் கொடுக்கக்கூடாது எனச் சொல்வது எப்படிச் சரியாகும். தவிர, ஐந்து பேருக்கு ஐம்பது பேருக்கான சாப்பாட்டையோ, ஐம்பது பேருக்கு ஐந்து பேருக்கான சாப்பாட்டையோ கொடுக்கக்கூடாது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது மிகவும் முக்கியம். அதனால், குடிவாரிக் கணக்கெடுப்பு நடக்கவேண்டும். அப்போதுதான் இதில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். ஆனால், தமிழரல்லோதோர் அதிகமாக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள், அது வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காகத்தான் குடிவாரிக் கணக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். ஓட்டுக்குக் காசு ஒரே நாள் இரவில் திட்டமிட்டுக் கொடுப்பவர்களால், குடி வாரிக் கணக்கெடுப்பை நடத்தமுடியாமல் இருப்பது ஏன்?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism