Published:Updated:

`வஞ்சம் வைத்து பழிதீர்க்கும் மனித மிருகம் நான்!' - வேலூரில் சீமான் ஆவேசம்

சீமான்

``நான் செய்வது, என் இன உரிமை அரசியல்; இன வெறுப்பு அரசியல் கிடையாது. என் நிலத்தை நான்தான் நேசித்து நேசித்துப் பேச முடியும்’’ என்கிறார் சீமான்.

`வஞ்சம் வைத்து பழிதீர்க்கும் மனித மிருகம் நான்!' - வேலூரில் சீமான் ஆவேசம்

``நான் செய்வது, என் இன உரிமை அரசியல்; இன வெறுப்பு அரசியல் கிடையாது. என் நிலத்தை நான்தான் நேசித்து நேசித்துப் பேச முடியும்’’ என்கிறார் சீமான்.

Published:Updated:
சீமான்

வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ``உழைக்கிறவன் கையேந்துகிறான்; உழைக்காதவன் கொடுக்கிறான்; இதுதான் சுரண்டல். இதைத் தடுக்கணுமா... இல்லையா? உன் உழைப்பைச் சுரண்டி, அவன் கொழுத்து பெருத்து நிற்கிறான் என்பதை எப்போது புரிந்துகொள்கிறாயோ, அன்றுதான் நீ புரட்சிக்கு, கிளர்ச்சிக்குத் தயாராவாய். என்கிட்ட ஆட்சி சிக்கிச்சு... பஞ்சமி நிலம் மொத்தமாக மீட்கப்படும். புதுக்கோட்டையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை கஞ்சா விற்றதாகச் சொல்லி இரவோடு இரவாகத் தூக்கி உள்ளே வெச்சுட்டாங்க. அவன் படிக்கிற பையன். தேர்தல்ல இருந்து விலக மாட்டேன்னு சொன்னதுக்காக பழிவாங்கியிருக்காங்க. எங்கமேல அவ்வளவு பயமாடா. ஒரு காலம் வரும். நான் வருவேன். உன் வீட்டு மாடியில், அடுப்படியில், படுக்கையில்கூட கஞ்சா விளையும். காலையில் நீ எழுந்திருக்கும்போது தலையிலகூட கஞ்சா விளையும். கார் டிக்கியில் விளையும். எல்லாவற்றிலும் விளையும். என்னை மாதிரி வஞ்சம்வைத்து பழிதீர்க்கும் மனித மிருகத்தை நீ வரலாற்றிலேயே சந்திச்சிருக்க மாட்ட.

சீமான்
சீமான்

நான், அவ்ளோ நல்லவன் இல்லை. ஓரளவு நல்லவனாக இருப்பதுதான் என்னுடைய பலம். மக்கள் அரசியல் செய்கிறேன். நான் அண்ணன் பிரபாகரன் மாதிரியில்லை. என்னுடைய களம் வேறு; காலம் வேறு. நான் சுத்த காட்டுப் பையன். என் ஊரும் பொட்டல் காடுதான். நீட் வேண்டாம் என்பதுதான் தி.மு.க., அ.தி.மு.க-வின் முடிவாகவும் இருக்கிறது. ஆனால், ‘நீட் தேர்வு வேண்டும்’ என்று கார்த்தி சிதம்பரம் பேசுகிறார். ‘தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கொண்டுபோனால்... நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதைத் தகர்ப்பேன்’ என்கிறார் சிதம்பரம் மனைவி நளினி. ஆனால், இரண்டு கட்சியும் கூட்டணி. இது எந்த மாதிரி கூட்டணி... உங்களால் மானங்கெட்டு, வெட்கங்கெட்டு மக்களை எப்படிச் சந்திக்க முடிகிறது? மக்களுக்கும் நீட் பற்றிய கவலையில்லை. ‘நீட்டை விடுப்பா; 500 ரூபாயை நீட்டுப்பா’ என்கிறார்கள் மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘மதிப்புமிக்க நம் உரிமைகளைச் சில ரொட்டித் துண்டுகளுக்காக விற்பது அவமானகரமானது’ என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ‘ஓட்டுக்குக் காசு கொடுக்கிறவன் பாவி; அந்தக் காசை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுகிறவன் தேசத் துரோகி.’ இதை சொன்னது முத்துராமலிங்கத் தேவர். ‘தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பானா!?’ இது, பேரறிஞர் அண்ணா சொன்னது. நாம் தொடர்ச்சியாகத் தவிட்டுக்கு ஓட்டை விற்கிறோம். அண்ணா பெயரைச் சொல்லி அரசியல் செய்கிறவர்களே தவிட்டுக்கு ஓட்டை வாங்குகிறார்கள். மக்களாட்சியின் வலிமைமிக்க ஆயுதம் வாக்கு. அதை விற்பதால், உங்கள் உரிமையை நீங்கள் இழந்துவிடுகிறீர்கள். இதை என்றைக்கு உணர்கிறீர்களோ... அப்போதுதான் நீங்கள் மேம்படுவீர்கள்; பெருமையோடும் உரிமையோடும் வாழ்வீர்கள். சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் ஓட்டுப்போட்டால், தமிழ்நாட்டுக்குள் பி.ஜே.பி எப்படி வரும்? எங்களை ‘பி’ டீம் என்கிறார்கள். நாங்கள் பி.ஜே.பி-யுடனா கூட்டணி வைத்திருக்கிறோம்?

சீமான்
சீமான்

பி.ஜே.பி-யுடன் முன்பு கூட்டணி வைத்தது தி.மு.க; அதன் பிறகு அ.தி.மு.க கூட்டணி வைத்தது. ஹெச்.ராஜாவை சட்டசபைக்கு அனுப்பியது தி.மு.க; நல்லக்கண்ணுவைத் தோற்கடித்து சி.பி.ராதாகிருஷ்ணனைப் பாராளுமன்றம் கூட்டிப்போனது தி.மு.க; என் வீட்டில் சுவிட்ச் போட்டால் அவன் வீட்டில் எப்படிடா லைட் எரியும் பைத்தியக்காரா? ‘100 விழுக்காடு இந்துக்கள் இருக்கும் கட்சி‘ என்று சொல்லிக்கொள்கிறது பி.ஜே.பி. ‘90 விழுக்காடு இந்துக்கள் இருக்கும் கட்சி‘ என்று சொல்லிக்கொள்கிறது தி.மு.க. அப்படியெனில், தி.மு.க-தான் பி.ஜே.பி-யின் பி டீம். இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் எந்தக் காலத்திலும் பி.ஜே.பி-க்கு ஓட்டுப்போட மாட்டான். ‘நம்மை விட்டால் அவர்களுக்கு ஆளில்லை’ என்று தி.மு.க நினைக்கிறது. இத்தனை ஆண்டுக்கால ஆட்சியில், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு செய்த ஒரே நன்மையை மட்டும் சொல்லுங்கள். ஒன்றுதான் கேட்கிறேன்.

துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் அண்ணாவைப் பார்த்து வந்தவர்கள். இப்போது, ஒண்ணுமில்லாத மண்ணோடு நின்று வேலை செய்கிறோம் என்று நினைப்பார்கள். நான் செய்வது, என் இன உரிமை அரசியல்; இன வெறுப்பு அரசியல் கிடையாது. எல்லோருக்கும் தனித்தனி தாய் நிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்டன. அவரவர் தாய் நிலங்களை அவரவரே ஆள்கிறார்கள். அதைப்போல, என் நிலத்தை நான்தான் நேசித்து நேசித்துப் பேச முடியும்" என்றார் சீமான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism