Published:Updated:

`சுதந்திரமே இல்லை... எதற்கு இந்தத் துணை முதல்வர் பதவி?' - பொங்கிய பன்னீர்!

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

`கூடிய விரைவில் அடுத்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டும்' என்று அமைச்சர் வேலுமணி, தங்கமணி டீம் பன்னீருக்கு அழுத்தம் கொடுக்கிறார்களாம். ஆனால், விட்டுக்கொடுக்கும் மனநிலையில் பன்னீர் இல்லை

அல்வாவைச் சுவைத்தபடி செய்திக்குள் தாவிய கழுகார், "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத் துக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புக்கு கட்சி ரீதியான செயல்பாடுகள் மட்டும் காரணமில்லையாம். தனது வீட்டுவசதித் துறையில் முதல்வரின் பெயரைச் சொல்லி ஏகப்பட்ட தலையீடுகள் நடப்பதாக நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் பன்னீர்.

சமீபத்தில், சென்னை அருகே சுமார் நூறு ஏக்கர் இடத்துக்கு ஒப்புதல் வழங்கச் சொல்லி ஒரு கோப்பு வந்துள்ளது. அதில் சில சிக்கல்கள் இருந்ததால், அதை நிறுத்தப் பார்த்தாராம் பன்னீர். ஆனால், முடியவில்லை. 'எனது துறையில்கூட என்னால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. பிறகு எதற்கு இந்தத் துணை முதல்வர் பதவி?' என்று பொங்கியிருக்கிறார்."

"இருக்காதா பின்னே!"

"அதேநேரம், `சுறுசுறுப்பாக ஒரு காரியம் செய்திருக்கிறார்' என்கிறார்கள் சி.எம்.டி.ஏ பணியாளர்கள். கட்டடம் கட்டி முடித்துவிட்டு, சி.எம்.டி.ஏ-வின் 'கம்ப்ளீஷன்' சான்றிதழுக்காக ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். இப்படிக் குவிந்திருந்த சுமார் இரண்டாயிரம் கோப்புகளை ஒரே மூச்சில் க்ளியர் செய்துவிட்டாராம் பன்னீர்."

"இத்தனை நாள்கள் பெண்டிங் போட்டுவிட்டு, கடைசி நேரத்தில் வேலை பார்த்திருக்கிறார்... இதிலென்ன சுறுசுறுப்பு வேண்டிக்கிடக்கிறது?"

" `கூடிய விரைவில் அடுத்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டும்' என்று அமைச்சர் வேலுமணி, தங்கமணி டீம் பன்னீருக்கு அழுத்தம் கொடுக்கிறார்களாம். ஆனால், விட்டுக்கொடுக்கும் மனநிலையில் பன்னீர் இல்லை. கட்சி விதிகளின்படி, பொதுக்குழு கூட்ட வேண்டுமெனில், எடப்பாடியுடன் பன்னீரும் கையெழுத்து போட்டு அறிக்கை வெளியிட வேண்டும். ஒருவேளை பொதுக்குழுவைக் கூட்டி எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டால், பன்னீர் கையெழுத்து போடுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்."

ரஜினி.. அப்டேட்...

வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ரஜினியை, கடந்த பிப்ரவரி மாதமே மறு பரிசோதனைக்கு அழைத்துள்ளது சம்பந்தப்பட்ட மருத்துவமனை. ஆனால், கொரோனா பரவ ஆரம்பித்ததால் பயணத்தை ஒத்திப்போட்டார் ரஜினி. ஆறு மாதங்கள் கடந்தநிலையில், மறுபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடக்கிறது.

மலைக்கவைத்த பினாமி சொத்துக் கணக்கு!

* சசிகலா ஆதரவு அமைச்சர்களைக் கண்காணித்து, அவர்களின் பினாமி சொத்துகளைப் பட்டியல் எடுக்கச் சொல்லி மாநில உளவுத்துறைக்கு உத்தரவு பறந்துள்ளது. கடலோர மாவட்டம் ஒன்றில் ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ சீட் மறுக்கப்பட்ட ஒருவருக்கு விசுவாசத்தின் அடிப்படையில் சீட் அளித்து, அமைச்சர் பொறுப்பும் அளித்தார் சசிகலா. அந்த அமைச்சரின் பினாமி சொத்துக் கணக்கை உளவுத்துறை சமர்ப்பித்தபோது தலைமையே மலைத்துவிட்டதாம்!

> "சசிகலாவின் விடுதலை விவகாரம் எந்த அளவில் உள்ளது?"

> "மக்கள் நீதி மய்யத்தில் ஏதோ புகைச்சலாமே?"

> "தி.மு.க செய்திகள் ஏதேனும் உண்டா?"

- இந்தக் கேள்விகளுக்கான விரிவான தகவல்களுடன் கழுகார் தந்த கான்ஃபிடென்ஷியல் நோட் உள்ளிட்ட அனைத்தையும் ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/34lOuIb > மிஸ்டர் கழுகு: ஜாதகம் சரியில்லை! - ஸ்டாலினுக்குத் தடைபோட்ட கிச்சன்... https://bit.ly/34lOuIb

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு