Published:Updated:

மனைவி இறந்து ஓராண்டு நிறைவு! - திதி கொடுக்க குடும்பத்துடன் ராமேஸ்வரத்துக்கு வந்த ஓபிஎஸ்!

குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

தன் மனைவி இறந்து ஓராண்டு நிறைவடைந்தைத் தொடர்ந்து அவருக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் வந்தார்.

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தீர்ப்பு, அலுவலக சாவி விவகாரம் என ஓ.பி.எஸ் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறார். நீதிமன்ற தீர்ப்புகளால் உற்சாகத்தில் இருக்கும் எடப்பாடி தரப்பு, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வருகிறது. எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லிக்குச் செல்கிறார், நாளை அவர் மோடி, அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

அக்னி திருத்தக்கடலில் புனித நீராடிய ஓபிஎஸ்
அக்னி திருத்தக்கடலில் புனித நீராடிய ஓபிஎஸ்

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகளைச் செய்து வருகிறார். கடந்த வாரம் விருதுநகரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று ஒரு நாள் முழுவதும் இருந்து பூஜைகள் செய்து தரிசனம் செய்தார். இதையடுத்து தன் மனைவி இறந்து ஓராண்டு நிறைவடைந்தைத் தொடர்ந்து அவருக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் வந்தார். ஆனால் அவரை வரவேற்க விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நிர்வாகிகள் வந்திருந்தனர். முன்பு ஓ.பன்னீர்செல்வம் ராமேஸ்வரம் வரும்போதெல்லாம் அங்கிருக்கும் அ.தி.மு.க நிர்வாகியின் நட்சத்திர ஹோட்டலில்தான் தங்குவார். அவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கோயிலில் கட்சி நிர்வாகிகள் புடைசூழ தரிசனம் மேற்கொள்வார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஓபிஎஸ்
ஓபிஎஸ்
குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்
குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

ஆனால் இந்த முறை அது தலைகீழாக மாறியிருந்தது. ஓ.பி.எஸ் வேறு நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கினார். அதிகாலை கோயிலுக்குக் குடும்பத்துடன்வந்த ஓ.பன்னீர்செல்வம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி இறந்த மனைவிக்கு திதி கொடுத்தார். பின்னர் கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடினார். கோயிலில் அவரை வரவேற்று வழிநடத்திச் செல்ல அவரால் பரிந்துரை செய்யப்பட்டு மேல்சபை எம்.பி ஆன தர்மர் மற்றும் அவர் உடன் வந்தவர்கள் மட்டுமே இருந்தனர்.