Published:Updated:

ஓ.பி.எஸ்: நிர்வாகிகளுடனான ஆலோசனையில் உற்சாகம்... பொதுக்குழு வழக்கில் நடப்பது என்ன?!

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

``பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாகப் பின்பற்றவில்லை எனத் தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.” - நீதிபதி

ஓ.பி.எஸ்: நிர்வாகிகளுடனான ஆலோசனையில் உற்சாகம்... பொதுக்குழு வழக்கில் நடப்பது என்ன?!

``பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாகப் பின்பற்றவில்லை எனத் தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.” - நீதிபதி

Published:Updated:
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

அதிமுக-வின் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே சட்ட யுத்தம் தீவிரமடைந்துவருகிறது. ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரகத்தில் நடந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதற்கு முன்தினம் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

சென்னை, காஞ்சிபுரம், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், எடப்பாடி தரப்பு நீக்கிய நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டவர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், லியாகத் அலிகான், ஜே.சி.டி.பிரபாகர், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர்.

இது குறித்து ஓ.பி.எஸ் தரப்பிடம் பேசினோம். ``ஜூலை 11-ம் தேதி எடப்பாடி தரப்பு பொதுக்குழு நடத்தியபோதே, ஓ.பி.எஸ் தலைமையில் புதிய பொதுக்குழு நடத்தத் திட்டமிட்டோம்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

ஆனால், அடுத்தடுத்த வழக்குகள் தொடரப்பட்டதால், அதைச் செய்ய முடியவில்லை. தற்போது தி.மு.க அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி தரப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. அதேபோல, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களையும் நடத்திவருகிறார்கள். இதனால், தங்களின் ஆதரவாளர்களைக் கூட்டி பொதுக்கூட்டம் நடத்த ஓ.பி.எஸ் விரும்புகிறார்.

அதற்கு முன்பாக ஆதரவாளர்கள் வட்டத்தைப் பெரிதாக்க வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக மாவட்டம் முதல் வார்டு வரை விரைவாக நிர்வாகிகளை நியமிக்க ஓ.பி.எஸ் அறிவுறுத்தியிருக்கிறார். குறைந்தது ஒரு லட்சம் நிர்வாகிகளை நியமிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். நியமனங்கள் முடிந்ததும், செப்டம்பரில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் மிகவும் உற்சாகமாக இருந்திருக்கிறார். நிர்வாகிகளிடம், ``கட்சி, தலைமை அலுவலகம், இரட்டை இலை என எல்லாமே நம் கைக்கு விரைவில் வந்துவிடும். நீதிமன்றத்தில் நமது தரப்பு வாதம் ஆக்கபூர்வமாக நிச்சயம் அமையும். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்" என்று தெம்பு ஏற்றியிருக்கிறார்.

அதன்படி, மறுநாள் 10-ம் தேதி பொதுக்குழு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ் தரப்பில் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பாக ஶ்ரீராமும் ஆஜராகினர். அதேபோல், எடப்பாடி தரப்பில் விஜய நாராயணன் ஆஜரானார். அப்போது, ஓ.பி.எஸ் தரப்பு வக்கீல்கள், 'மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது' என்று வாதிட்டனர்.

அதிமுக - ஓபிஎஸ். - இபிஎஸ்
அதிமுக - ஓபிஎஸ். - இபிஎஸ்

எடப்பாடி தரப்பு வக்கீல், ``ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாவிட்டால் பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்கின்றன. பொதுக்குழுவுக்குத் தலைமைக் கழக நிர்வாகிகள் அழைப்புவிடுத்ததில் தவறில்லை. கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது' என்றனர்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்... பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா?" என்று கேள்விகளை முன்வைத்தார். இறுதியாக, ``பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாகப் பின்பற்றவில்லை எனத் தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும். நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் கட்சி விதிப்படி நியமிக்கப்பட்டாரா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி தரப்புக்கு நீதிபதி பல்வேறு கேள்விகளை முன்வைத்திருப்பதால், இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என்று ஓ.பி.எஸ் மகிழ்ச்சியில் குதூகலமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து இரண்டு வாரங்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. 10-ம் தேதி நடைபெற்ற விசாரணையிலேயே இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி முழுமையாகக் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே, இன்று 11-ம் தேதி விசாரணையில் சில கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. இரு தரப்பு வாதமும் பதிவுசெய்யப்பட்டன. விரைவில் இரு தரப்பிலிருந்தும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்!