Published:Updated:

ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ்... புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி?!

எடப்பாடி - ஓ.பி.எஸ்

அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் கிழமைகளில் புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த லிஸ்ட்டை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடவிருக்கிறார் என்பது தகவல்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ்... புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி?!

அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் கிழமைகளில் புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த லிஸ்ட்டை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடவிருக்கிறார் என்பது தகவல்.

Published:Updated:
எடப்பாடி - ஓ.பி.எஸ்

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவருகின்றன. அதிமுக-வைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள இத்தகைய மோதல் போக்கு தொண்டர்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி சிறப்புப் பொதுக்குழுவை நடத்தினார். இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார்.

பின்னர், அதே பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மூன்று பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ops
ops

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் போக்குக்குச் சற்றும் சளைக்காத ஓ.பன்னீர்செல்வம் இதற்குப் போட்டியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 22 பேரைக் கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மேலும் 44 பேரை ஓ.பன்னீர்செல்வம் நீக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கடந்த 15-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அமைந்தகரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்தச் சூழலில், கடந்த 18-ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் கவச உடை அணிந்து வாக்களித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஓ.பி.எஸ்., வரும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் வீடு திரும்பிய பின்னர் எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன என்பது குறித்து ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருங்கிய முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில்,

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``ஓ.பன்னீர்செல்வம் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். இதையடுத்து, அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் கிழமைகளில் புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த லிஸ்ட்டை வெளியிடவிருக்கிறார். ஏற்கெனவே, எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த 66 பேரை நீக்கியிரூக்கிறோம். இதில், பெரும்பாலானோர் மாவட்டச் செயலாளர்கள்தான். அதன்படி புதிய மாவட்டச் செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கவிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது" என்றார்.