Published:Updated:

“நாங்கதான் செய்யலை... நீங்களாச்சும் செய்யலாமே...”

ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ்

ஓவியங்கள்: சுதிர்

“நாங்கதான் செய்யலை... நீங்களாச்சும் செய்யலாமே...”

ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ்

சமீபகாலமாக தி.மு.க அரசை விமர்சித்து ஓ.பி.எஸ் வெளியிடும் அறிக்கைகளில் சில, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களைக் குத்திக்காட்டுகிற தொனியிலேயே அமைந்துவிடுகின்றன. “நாங்கதான் செய்யலை... நீங்களாச்சும் செய்யலாமே...” என்று முதல்வர் ஸ்டாலினைப் பார்த்துக் கேட்பதாகவே அந்த அறிக்கைகளின் தொனி இருக்கிறது. அவற்றில் சில...

“மதுரை மருத்துவக் கல்லூரியில் ‘மகிரிஷி சரக் சபத்’ என்ற சம்ஸ்கிருத வாக்கியத்தைக் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இது போன்ற உறுதிமொழி ஏற்கெனவே தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசு சார்பில் தெளிவான அறிவுரைகள் மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்படவில்லை!”

“விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்கலைனு ஓப்பனா சொல்றார்போல!”

“உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழி தொடர்பாகப் பேசிய கருத்து, கழக இணை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதலில் தெரியாததால் ‘ஒன்றுமே தெரியாது’ என்று கூறினார். அமித் ஷா கருத்துக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் அறிக்கை வெளியிட்டேன்!”

“சகோதரர்னு சொல்லிக்கிட்டே அவர் காலை வாரிட்டீங்களேய்யா!”

“16-09-2020-ல் சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை சார்பாக மூலிகைகள் சம்பந்தமான ஒரு புத்தகத்தில் பெயர்கள் இந்தியில் போடப்பட்டிருந்தன. `இது மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதுபோல இருக்கிறது’ என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.”

“இது கண்டன அறிக்கை மாதிரியே தெரியலியே?”

“பள்ளி மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ என்னும் கல்வி மேலாண்மைத் தகவல் மையம் மூலம் ஆசிரியர்கள் சேகரித்துவருகின்றனர். அதில் மாணவிகளின் உடல் சார்ந்த பிரச்னைகள் கேட்கப்படுகின்றன. இதைத் தமிழக அரசு தவிர்க்க வேண்டும். அதேபோல, எமிஸில் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதால், ஆசிரியர்களுக்குக் கல்வி போதிக்க நேரம் கிடைப்பதில்லை!”

“எமிஸ் ஆப்பை அறிமுகம் செய்ததே உங்க ஆட்சியில்தானே... அப்ப இதைச் சொல்லலையே நீங்க!”

“முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, `பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர வேண்டும்’ என்று 24-01-2018-ல் அறிக்கை வெளியிட்டார். பின்னர், 4-4-2018-ல் ட்விட்டரிலும் வலியுறுத்தினார். அதேபோல, 28-06-2018-ல் சட்டப்பேரவையில் தி.மு.க சார்பில் தீர்மானம் அளிக்கப்பட்டது. அதை தற்போது பின்பற்றி, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்து மக்களின் நலனைக் காக்க வேண்டும்!”

“நாங்கதான் அதைப் பண்ண முடியலை... நீங்களாச்சும் நிறைவேத்திருங்கனு சொல்றாரோ?!”

“நாங்கதான் செய்யலை... நீங்களாச்சும் செய்யலாமே...”



“நீட் தேர்வு ரத்து தொடர்பான சட்ட முன்வடிவு தமிழகத்தைத் தாண்டிச் செல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தம் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வை ரத்துசெய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்!”

“முன்னாள் முதல்வரால அழுத்தம் கொடுக்க முடியலை... அதானே?”

“மது ஒவ்வொரு குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் வலியுறுத்தினார். தற்போது சட்டம்- ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றித் துளியும் கவலைப்படாமல் மது வருவாயைப் பெருக்கத் தீவிரமாக தி.மு.க செயல்படுகிறது!”

“அவர் குரல் கொடுக்கறப்பவே கடைகளைக் குறைக்கவாவது செஞ்சிருக்கலாமே... அதை விட்டுட்டு நெடுஞ்சாலைகள்ல கடை இருக்கக் கூடாதுனு நீதிமன்றம் சொன்னப்ப, நெடுஞ்சாலைக்கே பேரை மாத்தி, தொடர்ந்து நடத்திக்கிட்டுதானே இருந்தீங்க!”

“நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் 22-2-2021 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி குறித்து எந்தத் தகவலும் அந்த அரசாணையில் இல்லை!”

“அந்தத் தேதியில உங்க அன்புச் சகோதரர் எடப்பாடிதானே ஐயா முதலமைச்சர்?”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism