Published:Updated:

பன்னீர் உதிர்த்த முத்துக்கள்!

ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

தினகரன் பேசுவது எல்லாம் பொய். அவர் அப்போதைக்கு எதையாவது சொல்லி ஏமாற்றலாம்

பன்னீர் உதிர்த்த முத்துக்கள்!

தினகரன் பேசுவது எல்லாம் பொய். அவர் அப்போதைக்கு எதையாவது சொல்லி ஏமாற்றலாம்

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கண்ணசைவின் பேரிலேயே ‘சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்’ என்று தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தீர்மானம் இயற்றியதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து சசிகலாவை சந்தித்தார் என்பதற்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் பன்னீரின் தம்பி ஓ.ராஜா. இதையடுத்து, “ஒருபக்கம் சசிகலாவை சந்திப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கையெழுத்துப் போட்டுக்கொண்டே மறுபக்கம் சசிகலாவை கட்சியில் இணைக்க காய்நகர்த்துகிறார் ‘டபுள்கேம்’ பன்னீர்” என்ற குரல்கள் ராயப்பேட்டை வட்டாரத்தில் உரக்கக் கேட்கின்றன. இந்தநிலையில்தான் கடந்த காலங்களில் இதுதொடர்பாக பன்னீர் உதிர்த்த வார்த்தைகளை இங்கே பார்ப்போம்!

பன்னீர் உதிர்த்த முத்துக்கள்!

“ஜெயலலிதா இருக்கும்போது யார் குடும்பத்தின்கீழ் கட்சி சென்றுவிடக் கூடாது என்று நினைத்தாரோ, அந்தக் குடும்பத்தின் கையில் கட்சி தற்போது இருக்கிறது. ஜெயலலிதா விருப்பப்படி ஆயிரம் ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்க வேண்டுமென்றால், அந்தக் குடும்பத்திடமிருந்து விடுபட வேண்டும். மன்னர் ஆட்சியிலிருந்தும் விடுபட வேண்டும். இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்!”

“புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் நிறுவும்வரை, நம்முடைய தர்மயுத்தம் தொடரும்... தொடரும்... தொடரும்!”

“மாண்புமிகு அம்மா அவர்களின் மரணம் குறித்து கேள்வி கேட்டதால் வெளியேற்றப்பட்டேன்.”

பன்னீர் உதிர்த்த முத்துக்கள்!

“அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்கக்கூடியது மக்கள் மனநிலையைப் பொருத்தது. சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவு எடுப்பார்கள்!”

“ஒரு குடும்பத்தின் (சசிகலா குடும்பம்) பிடிக்குள் கட்சியும் ஆட்சியும் இருக்கக் கூடாது!”

“தினகரன் பேசுவது எல்லாம் பொய். அவர் அப்போதைக்கு எதையாவது சொல்லி ஏமாற்றலாம். அவர் அடிக்கடி என்னிடம், ‘எனக்கு இன்னொரு முகம் உள்ளது. அதை நேரம் வரும்போது காட்டுவேன்’ என்பார். இன்னொருமுறை, ‘நான் பெரிய 420. அது உங்களுக்குத் தெரியாது. போகப் போக உங்களுக்குத் தெரியும்’ என்று சொல்வார்!”

பன்னீர் உதிர்த்த முத்துக்கள்!

“தர்ம யுத்தத்துக்கு முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கிவைப்பது என்று அவர்கள் (எடப்பாடி) தரப்பில் முடிவெடுத்துள்ளார்கள்!”

“தலைமைக் கழகத்தின் நிர்வாகத்தினர், ஒன்றரைக் கோடி உண்மையான தொண்டர்களின் இசைவு பெற்றுதான் குடும்பம் சார்ந்த அந்த 16 பேரை நீக்கினோம். மீண்டும் அவர்களைச் சேர்க்கும் கேள்வி எழவில்லை. எழுந்தால் அதைத் தீர்மானிக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக எங்களுடைய பொறுப்புதான் உள்ளது!”

பன்னீர் உதிர்த்த முத்துக்கள்!

“தினகரன் ஒரு மாயமான். மாயமானை நம்பிப்போன கதையை ராமாயணத்தில் படித்திருப்பீர்கள். அதில் என்ன நிலைமை ஏற்பட்டதோ, அந்த நிலைமைதான் ஏற்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.’’

“மாண்புமிகு அம்மா அவர்கள் எப்படி துணிச்சலாக நின்று போராடி, எப்படி தர்மயுத்தம் நடத்தி வெற்றிபெற்றாரோ, அதே வழியை நாமும் பின்பற்றி நம்முடைய தர்மயுத்தம் வெற்றிபெறும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, உறுதியாக இந்தத் தர்மயுத்தத்தில் போராட்டத்தில் வெற்றிபெற்று மீண்டும் மாண்புமிகு அம்மாவுடைய ஆட்சியை நாங்கள் நிறுவுவோம்!”

“அ.தி.மு.க-வை மீண்டும் சசிகலா குடும்பத்துக்குள் திணிக்க முயல்கிறார் டி.டி.வி.தினகரன். தினகரன் மீண்டும் அதிமுக-வில் இணைவதற்கோ, இணைப்பதற்கோ வாய்ப்பு இல்லை!”

பன்னீர் உதிர்த்த முத்துக்கள்!

“என்னைக் கூப்பிட்டு ரிசைன் பண்ணி எழுதி வாங்கினார்கள். காய் நகர்த்தி அவர்களை (சசிகலா) உள்ளே அனுப்பிவிட்டு இவர் (தினகரன்) முதலமைச்சர் ஆக பிளான் பண்ணி வேலையைக் கச்சிதமாக முடித்தார்!”

(சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினைப் பார்த்து சிரித்தார் என்று சசிகலாவால் குற்றம்சாட்டப்பட்டு, பதவியிலிருந்து நீக்கியபோது) “அம்மா அவர்களால் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தரப்பட்ட பொருளாளர் பதவியில், நான் மாண்புமிகு அம்மா மனநிறைவுகொள்ளும் அளவில் பணியாற்றி இருக்கிறேன். அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழகத்தில் யாருக்கும் உரிமை இல்லை!”

பன்னீர் உதிர்த்த முத்துக்கள்!

“நல்லவர்கள் என்றுமே நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால், அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையதாக இருக்கும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism