Published:Updated:

‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்!’’

Naveen Patnaik
பிரீமியம் ஸ்டோரி
Naveen Patnaik

- ஒடிசாவில் ஓங்கி ஒலிக்கும் மோ சர்க்கார்

‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்!’’

- ஒடிசாவில் ஓங்கி ஒலிக்கும் மோ சர்க்கார்

Published:Updated:
Naveen Patnaik
பிரீமியம் ஸ்டோரி
Naveen Patnaik

பிஜு ஜனதா தளம் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் தொடங்கியிருக்கும் புதிய திட்டம் ‘மோ சர்க்கார்’. இது, இந்திய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மோ சர்க்கார் என்பதன் பொருள், ‘உங்கள் அரசு!’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2019 மே 27 அன்று, ஐந்தாவது முறையாக ஒடிசாவின் முதலமைச் சராக நவீன் பட்நாயக் பதவி யேற்றதும், பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். முக்கிய மாக, ‘வளர்ச்சிக்கான ஐந்து அம்சங்களை நிறைவேற்றுவதை நோக்கி ஒடிசா அரசு பயணிக்க வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் `5T’ எனும் மாற்றம் மற்றும் புதிய முயற்சிகளுக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. Transparency, Teamwork, Technology, Time and Transformation என்பதே 5T. இந்தத் திட்டத்தின் செயலாளராக, முதலமைச்சரின் தனிச் செயலாளரான தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேய பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, 5T-ன்கீழ் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் ‘மோ சர்க்கார்’ திட்டம், ஒடிசாவில் பெரும்புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசாவில் அரசு நிறுவனங்களுக்கு அல்லது அலுவலகங்களுக்குச் செல்லும் அனைவரின் முழு விவரமும் ‘மோ சர்க்கார்’ மென்பொருளில் பதியப்படும். அவர்களில் சிலரை அழைத்து, ‘எங்களின் சேவை சரியாக இருந்ததா... ஏதும் குறைகள் உள்ளனவா?’ என்று கேட்டறிவார்கள். அந்தத் துறையின் அதிகாரி, அமைச்சர், ஏன்... முதல்வரேகூட அழைக்கலாம். மக்களின் கருத்தைக் கேட்டறிந்து தவறுகள் சரிசெய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், அக்டோபர் 2 முதல் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் திட்டம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. படிப்படியாக அரசின் அனைத்து அங்கங்களிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மாநில முதல்வர், ஒரு நாளைக்கு 10 பேருடன் பேசி கருத்துகளைக் கேட்டறிவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள், டி.ஐ.ஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் என அனைவரும் தினமும் ஏதேனும் சில எண்களை தொடர்புகொண்டு அரசு சேவைக்கான மக்களின் கருத்துகளைக் கேட்டறிவர். இதன் அடிப்படையில் மக்களின் குறைகளைத் தீர்ப்பதுடன், சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு, அதிகாரிகளுக்கு, பணியாளர்களுக்கு மதிப்பீடுகள் வழங்குவது, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது, குறைபாடுகளை சரிசெய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த மதிப்பீடுகளைவைத்தே அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வும் நிர்ணயிக்கப்படும்.

‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்!’’

தனிச் செயலர் கார்த்திகேய பாண்டியனிடம் பேசினோம். ‘‘உணவகங்களில் தொடங்கி, நாம் பயன்படுத்தும் கார் சேவை வரை அனைத்து தனியார் சேவைகளுக்கும் நம்மிடம் ஃபீட்பேக் கேட்கப்படுகிறது. ஆனால், மக்கள் பணத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில், அப்படியொரு நடைமுறை இல்லை. அரசு வேலையில் இருப்பவர்கள், தாங்கள் மக்களுக்கு சேவை செய்பவர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். அதை நினைவுபடுத்தவே இந்தத் திட்டம். இனி அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்பு அதிகரிக்கும். அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் இருக்கும்’’ என்றார்.

‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்!’’

இதுகுறித்து மாநில முதலமைச்சர் அரசு நிறுவனங்களுக்குப் பகிர்ந்துள்ள செய்தியில், ‘ஜனநாயக அமைப்பின் ஆன்மா, மக்கள். ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளும், மக்களின் பணத்திலேயே மக்களுக்காக இயங்குகின்றன. அவர்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் மட்டுமே அரசு செயல்படுகிறது. இந்த நிறுவனம், மக்கள் சேவைக்காகவே உருவாக்கப்பட்டது. இங்கு வரும் ஒவ்வொரு குடிமகனும் மரியாதையுடன் நடத்தப்படுவார். அவர்கள் குறைகளைக் கேட்டறிந்து நேர்மையாகவும் நெறி வழுவாமலும் நாங்கள் தீர்வு வழங்குவோம். மக்களே முதலாளிகள். அவர்கள் பணத்தில் பணிபுரியும் நாங்கள், மக்கள் சேவகர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

`இந்தச் செய்தி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் பார்வையில் படும்படி மாட்டி வைக்கப்பட வேண்டும்’ என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கேள்விகள் கேட்கப்படும் என்ற பயத்துடன் இனி ஒடிசா அரசு நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்யும்.

`மோ சர்க்கார்’ திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம்!