Published:Updated:

தூசி தட்டப்படும் வழக்கு... சிக்கலில் எடப்பாடி?!

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை உருவாக்கும் திட்டத்தில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறதாம் தி.மு.க. இதற்காக, இடைக்காலத் தடைபெற்றிருக்கும் ஒரு வழக்கில் தடையை உடைப்பதற்கு உண்டான பணிகள் வேகமாகியிருக்கின்றன.

தூசி தட்டப்படும் வழக்கு... சிக்கலில் எடப்பாடி?!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை உருவாக்கும் திட்டத்தில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறதாம் தி.மு.க. இதற்காக, இடைக்காலத் தடைபெற்றிருக்கும் ஒரு வழக்கில் தடையை உடைப்பதற்கு உண்டான பணிகள் வேகமாகியிருக்கின்றன.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழக காவல்துறை சார்பில் 2018-ம் ஆண்டு மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபிலிடம், "நீங்கள் சி.பி.ஐ விசாரணை கேட்டீர்களா? எந்த முகாந்திரத்தில் நீங்கள் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தீர்கள்?" என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு தி.மு.க தரப்பில் சில ஆதாரங்களை எடுத்து வைத்ததுடன், "சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையைத்தான் நாங்கள் கோரினோம். சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்கவில்லை" என்றனர். இந்த வாதங்களைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி மீதான சி.பி.ஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரத்தைத்தான் கையில் எடுக்கவிருக்கிறதாம் தி.மு.க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர் ஒருவர், "இந்த இடைக்காலத் தடையை உடைப்பதற்கு டெல்லியிலுள்ள சில மூத்த வழக்கறிஞர்களுடன் தி.மு.க வழக்கறிஞர்கள் விவாதித்து வருகின்றனர். விரைவில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு, சி.பி.ஐ விசாரணைக்கு இருந்த தடை நீக்கப்படும். ஏற்கெனவே, கொடநாடு வழக்கு காலைச் சுற்றும் நிலையில், சி.பி.ஐ விசாரணையும் இறுகினால், எடப்பாடி திண்டாடப்போவது நிச்சயம்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த வழக்கு ஒருவகையில் பா.ஜ.க-வுக்கும் கைகொடுக்கும் என்கிறது விவரமறிந்த வட்டாரம். சி.பி.ஐ-யின் உயர்பொறுப்பிலிருக்கும் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், "சிறப்பு புலனாய்வுக்குழு கோரிய தி.மு.க., தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துக் கொள்வதிலேயே ஆயிரம் அரசியல் அர்த்தங்கள் உள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் சி.பி.ஐ வசம் எடப்பாடி மீதான வழக்கு ஒப்படைக்கப்பட்டால், அரசியல்ரீதியாக பா.ஜ.க-வுக்கு லாபம். இந்த விசாரணையை காரணம்காட்டியே, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, விருப்பப்பட்ட எண்ணிக்கையில் சீட்களைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த கணக்கில்தான், டெல்லியும் மெளனமாக தி.மு.க-வின் முயற்சிகளை பார்த்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியை சி.பி.ஐ விசாரிக்கும்பட்சத்தில், அதையே காரணம்காட்டி, 'நாங்கள் அரசியல் பழிவாங்கவில்லை. வெளிப்படையான விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம்' என தி.மு.க பிரசாரம் செய்யும். அ.தி.மு.க கூட்டணிக்குள் குழப்பங்கள் அதிகரிக்கும். இதைத்தான் தி.மு.க எதிர்பார்க்கிறது" என்றார் விரிவாக.

எது எப்படியோ, தி.மு.க-வின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. ஜனவரி 2023-க்கு முன்னதாகவே எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி முற்ற ஆரம்பித்துவிடும் என்கிறது அறிவாலய வட்டாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism