Published:Updated:

ஒன் பை டூ: ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து தமிழக பா.ஜ.க நீதிமன்றத்துக்குச் சென்றது சரியா?

நயினார் நாகேந்திரன் - பரந்தாமன்
பிரீமியம் ஸ்டோரி
நயினார் நாகேந்திரன் - பரந்தாமன்

நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டால், இந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடே தேவையில்லை.

ஒன் பை டூ: ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து தமிழக பா.ஜ.க நீதிமன்றத்துக்குச் சென்றது சரியா?

நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டால், இந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடே தேவையில்லை.

Published:Updated:
நயினார் நாகேந்திரன் - பரந்தாமன்
பிரீமியம் ஸ்டோரி
நயினார் நாகேந்திரன் - பரந்தாமன்

நயினார் நாகேந்திரன், சட்டமன்றக்குழுத் தலைவர், பா.ஜ.க

ஒன் பை டூ: ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து தமிழக பா.ஜ.க நீதிமன்றத்துக்குச் சென்றது சரியா?

‘‘நீட் தேர்வு முறையாக நடந்துவருகிறது. தவிர, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டின் மூலம் 400-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். அதற்கு முன்பாக இவ்வளவு பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததில்லை. இந்தநிலையில், நீட் தேர்வு குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்டறிய இப்படியொரு குழு அமைக்க வேண்டிய தேவையே இல்லை. தற்போது குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.கே.ராஜன், மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கடைசியாகத்தானே ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஆனால் ஆரம்பத்திலேயே, ‘பல்வேறு மாணவர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள்’ என்று கருத்து தெரிவிக்கிறார். அது எப்படிச் சரியாகும்? அந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் பலரும் தி.மு.க மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினருக்கு வேண்டப்பட்டவர்கள். அவரிடம் நியாயமான அறிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைவரின் கருத்துகளையும் கேட்டிருக்க வேண்டுமே தவிர, ஆளும் தி.மு.க அரசு தங்கள் இஷ்டத்துக்குச் செயல்பட்டிருக்கக் கூடாது. எனவேதான் நீதிமன்றம் சென்றோம். இதிலென்ன தவறு?’’

ஒன் பை டூ: ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து தமிழக பா.ஜ.க நீதிமன்றத்துக்குச் சென்றது சரியா?

பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.கஒன் பை டூ

‘‘நீட் நுழைவுத் தேர்வுமுறை இல்லாமல் இருந்தபோது, தற்போது இவர்கள் சொல்வதைவிட அதிகமான கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயின்றார்கள். அதைத் திட்டமிட்டு மறைத்துப் பேசுகிறார்கள். நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டால், இந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடே தேவையில்லை. அதேபோல, ஏ.கே.ராஜன் இந்தக் குழு அமைக்கப்படுவதற்கு முன்பாக, ஓர் இந்தியக் குடிமகனாக, ஓய்வுபெற்ற நீதிபதியாக நீட் குறித்துத் தன் கருத்தைச் சொன்னார். அவர் மட்டுமல்ல, பல முன்னாள் நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், ஓய்வுபெற்ற பேராசியர்கள்கூட நீட் தேர்வு குறித்துத் தங்களின் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இது மிகவும் அவசியமான ஒன்று. `தி.மு.க-வுக்கு ஆதரவானவர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் நயினார் நாகேந்திரன். ஆனால், இக்குழுவில் உள்ளவர்களின் கருத்துகளை வைத்து மட்டுமே அறிக்கை தயார்செய்யப்படப்போவதில்லை. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் 86,000-க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்திருக்கின்றன. அனைத்தையும் ஆராய்ந்து அறிக்கை தருவது மட்டுமே இந்தக் குழுவின் வேலை. இந்தக் குழுவுக்கு எதிராக பா.ஜ.க நீதிமன்றம் சென்றிருப்பது மிகுந்த உள்நோக்கம்கொண்டது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism