Published:Updated:

``ஓராண்டுக்குள், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி முற்றிலும் ஒழிக்கப்படும்!” - அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன்
News
அமைச்சர் மெய்யநாதன்

``கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி கேட்டபோது, முதல்வர் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார். ஒருபோதும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்.” - மெய்யநாதன்

புதுக்கோட்டையிலிருந்து, அறந்தாங்கி வரை செல்லும் பேருந்து சேவையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``அறந்தாங்கி - ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கடந்தகால திமுக ஆட்சியின்போது, அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு நகரப் பேருந்து இயக்கப்பட்டது. அது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. பலமுறை கோரிக்கைவைத்தும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, தற்போது, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அரசு டவு்ன் பஸ் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும் தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர், ஆட்சிப் பொறுப்பு எடுத்த காலத்திலேயே தெரிவித்துவிட்டார்.

காவிரி, டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலுள்ள வேளாண் பகுதிகளையும் பாதுகாப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்த வகையில் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி கேட்டபோது, முதல்வர் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்.

``ஓராண்டுக்குள், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி முற்றிலும் ஒழிக்கப்படும்!” - அமைச்சர் மெய்யநாதன்

ஒரு போதும், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் போன்ற விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். மஞ்சள் பை திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது வெற்றி தருமா என்று யோசித்தோம். ஆனால், பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி முற்றிலுமாக அகற்றப்பட்டு, நெகிழி இல்லாத தமிழகமாக மாற்றப்படும். மஞ்சள் பை திட்டம் தற்போது, தமிழகத்தைப் பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன.

வடகிழக்கு பருவமழை ஏற்பட்ட 27 நாள்களும் ஒரு முன்களப் பணியாளர்போல முதலமைச்சர், நேரடியாகக் களத்துக்குச் சென்று துரித நடவடிக்கைகள் எடுத்து தமிழ் நாட்டை ஒட்டுமொத்தமாக அந்தப் பேரிடலிருந்து காப்பாற்றினார். முதலமைச்சர் நீர் மேலாண்மையை மிகச் சிறப்பாகக் கையாள்வதற்கான பல்வேறு திட்டங்களை வரும் காலங்களில் எடுத்துச் செல்லவிருக்கிறார். தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் தனி பட்ஜெட் தந்தவர், வேளாண்மையைக் காப்பாற்றவும், நிலத்தடி நீரை அதிகப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறார்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz