Published:Updated:

காப்பி பேஸ்ட் கதாகாலட்சேபங்கள் to நாச்சியப்பன் பாத்திரக் கடை - ஐ.டி விங் 'சம்பவங்கள்'

ஐ.டி விங்
ஐ.டி விங்

யுனெஸ்கோ நிஜமாகவே மோடியைச் சிறந்த பிரதமர் என அறிவித்தால்கூட இவ்வளவு சந்தோஷப்படுவார்களா எனத் தெரியவில்லை. ஆனால், ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பத்திரிகை அல்லது அமைப்பு பாராட்டிவிட்டால் குஷியாகிவிடுவார்கள்.

வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி விளையாட்டு காட்டுவது, பெரியாரை இழிவுபடுத்தித் தமிழர்களைச் சீண்டுவது என பி.ஜே.பி, ஐ.டி விங்கின் 'சீரியஸ் திருவிளையாடல்கள்' மட்டுமே தமிழ்கூறு நல்லுலகில் பிரபலம். ஆனால், வடக்கும் தெற்குமாக மொத்த இந்தியாவும் பி.ஜே.பி, ஐ.டி விங்கை 'வெச்சு செய்த சம்பவங்கள்' ஏராளம். அதுவும் குறிப்பாக ட்விட்டரில் பி.ஜே.பி ஐ.டி விங்கின் செயல்பாடுகள் பலவும் 'குபீர்' ரகமாக இருக்கும். அதிலிருந்து சில 'Rofl இன்னிங்ஸை' மட்டும் இங்கே பார்ப்போம்.

> கட்சி அக்கவுன்ட்கள், கட்சித் தலைவர்கள் அக்கவுன்ட்கள் என எல்லா இன்டர்நெட் அக்கவுன்ட்களுக்கும் பொறுப்பாளர்கள் இந்த 'ஆல் இன் ஆல்' அட்மின்கள்தான். பி.ஜே.பி, காங்கிரஸ் தொடங்கி சின்னச்சின்னக் கட்சிகள் வரைக்கும் இன்றைக்கு இதுதான் நிலை. தங்கள் கணக்குகளைத் தாங்களே நிர்வகிக்கும் கட்சித் தலைவர்கள் இங்கு மிகமிகக் குறைவு. எனவே, இணையத்தில் ஒரு தலைவரின் அல்லது கட்சியின் வீச்சு அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு இந்த அட்மின்களின் கைங்கர்யம் மிக முக்கியம். ஒரே ஒரு எழுத்துப் பிழையோடு இவர்கள் ட்வீட் போட்டால்கூட அன்றைக்கு அது 'கலாய் மெட்டீரியல்' ஆகிவிடும். அப்படிப்பட்ட ட்வீட் ஒன்று கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் அக்கவுன்ட்டிலிருந்து வந்து விழுந்தது. அது, ‘Congress misuses Article 356 several times… but Modi is destroying institutions: PM'. 'யாரு சாமீ நீங்க..?' என அட்மினை நெட்டிசன்ஸ் கலாய்க்க, எப்படியும் ட்வீட் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் அந்த ட்வீட் நீக்கப்படவில்லை.

காப்பி பேஸ்ட் கதாகாலட்சேபங்கள் to நாச்சியப்பன் பாத்திரக் கடை - ஐ.டி விங் 'சம்பவங்கள்'

> "காப்பி பேஸ்ட் ஆப்ஷன் மட்டும் ஒருநாள் வேலை செய்யவில்லை என்றால், அன்றைக்கு எந்த பி.ஜே.பி தலைவரின் அக்கவுன்ட்டிலிருந்தும் ஒரு ட்வீட்கூட வராது" என இன்னும் கன்ஹையா குமார் எங்கும் பேசவில்லைதான். ஆனாலும், அதுதான் உண்மை. அந்த அளவுக்கு காப்பி பேஸ்ட் ஆப்ஷனிலேயே காலம் நகர்த்துகிறது அக்கட்சியின் ஐ.டி விங். இதற்கு செமத்தியான உதாரணம், கடந்த ஆண்டு மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனின் அக்கவுன்ட்டில் நடந்த சம்பவம்தான். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு மணி நேரமும், எந்த ட்வீட்டை எந்த அக்கவுன்ட்டில் ட்வீட் போடவேண்டும், அதில் எதையெல்லாம் டிரெண்ட் செய்யவேண்டும் போன்ற விஷயங்கள் அனைத்தையும் ஒரு கூகுள் டாக்குமென்ட்டில் 'சேவ்' செய்து வைப்பது அவர்களின் வழக்கம். பின்னர், தகுந்த நேரத்தில் குறிப்பிட்ட ட்வீட்களை மட்டும் காப்பி பேஸ்ட் செய்து ட்வீட் செய்வார்கள். இந்த டாக்குமென்ட்டின் அக்ஸஸ் எப்படியோ ஆல்ட் நியூஸின் நிறுவனரான பிரதிக் சின்ஹாவுக்குக் கிடைக்க, உள்ளே புகுந்து நிறைய ட்வீட்களை எடிட் செய்துவிட்டார். பின்னர் இதை ட்வீட் செய்த அட்மின்கள் யாரும் அதில் என்ன இருக்கிறது என்றுகூடப் படிக்காமல் ட்வீட் செய்ய, அந்த அபத்த ட்வீட்கள் அத்தனையும் அப்படியே பொன்னாரின் அக்கவுன்ட்டில் வந்து விழுந்தன. முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2TNrhcq

> யுனெஸ்கோ நிஜமாகவே மோடியைச் சிறந்த பிரதமர் என அறிவித்தால்கூட இவ்வளவு சந்தோஷப்படுவார்களா எனத் தெரியவில்லை. ஆனால், ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பத்திரிகை அல்லது அமைப்பு பாராட்டிவிட்டால் குஷியாகிவிடுவார்கள். கடந்த ஆண்டு அப்படி இரண்டு சம்பவம் நடந்தன. முதலாவது, பிலிப் கோட்லர் விருது. இந்த விருது மோடிக்கு அறிவிக்கப்பட்டவுடனேயே எல்லா அமைச்சர்களின் அக்கவுன்ட்களிலிருந்தும் மோடிக்குப் பாராட்டுகள் குவிந்தன. ''சரி, இது என்னதான் விருது?" என்றால், யாருக்கும் தெரியவில்லை. சரி, இந்த விருதை இதற்கு முன்பு யாராவது வென்றிருக்கி றார்களா என்றால் அதுவும் இல்லை. சரி, இந்த விருதுக்காக மோடி எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனக் கேட்டால், அதையும் 'ரகசியம்' என மறுத்து விட்டனர். ஸ்ஸப்பா...!

காப்பி பேஸ்ட் கதாகாலட்சேபங்கள் to நாச்சியப்பன் பாத்திரக் கடை - ஐ.டி விங் 'சம்பவங்கள்'

> உலகத்திலேயே எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் காஷ்மீரில் நடந்த அளவுக்கு இணையம் இப்படி 145 நாள்களுக்கு முடக்கப்பட்டதில்லை. ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றத்தில், பிரிவு 370-ஐ நீக்கப்போவதாக அமித் ஷா அறிவிப்பதற்கு இரு நாள்களுக்கு முன்னரே காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டுவிட்டது. இணையம் துண்டிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். அரசின் இந்த முடிவுக்குக் காஷ்மீர் மக்களின் பதில் என்னவென்று கூடத் தெரியாத அளவுக்கு அவர்களின் குரல் நசுக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்திலும் விடாமல் ஸ்கோர் செய்தது பி.ஜே.பி ஐ.டி விங். #KashmirSupportsModi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து ட்விட்டரில் குறுக்குசால் ஓட்டினர். 'அங்கதான் இன்டர்நெட்டே இல்லையே... அவிங்க எப்படியா மோடிக்கு ஆதரவா ட்வீட் போடுவாங்க?' எனத் தலையில் அடித்துக்கொண்டனர் நெட்டிசன்ஸ். இந்த ஃபார்முலாவை CAA விவகாரத்தில் வடகிழக்கிலும் பயன்படுத்தினர்.

- இவை வெறும் டீஸர்கள்தான். மெயின் பிக்ஸரை ஆனந்த விகடன் இதழில் முழுமையாகக் காண > ஐ.டி விங் அலப்பறைகள்! https://www.vikatan.com/government-and-politics/politics/some-famous-it-wing-atrocities

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு