Published:Updated:

``ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியில் சேர்ப்பதைக் காலம்தான் முடிவு செய்யும்” - சொல்கிறார் கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

``அதிமுக-வில் ஒரே தலைமைதான். கட்சியில் முழு ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்” என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

``ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியில் சேர்ப்பதைக் காலம்தான் முடிவு செய்யும்” - சொல்கிறார் கடம்பூர் ராஜூ

``அதிமுக-வில் ஒரே தலைமைதான். கட்சியில் முழு ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்” என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், செய்தி மற்றும் விளம்பரத்துறையின் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ அ.தி.மு.க-வின் மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அந்தக் கட்சியில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அவர், மீண்டும் கோவில்பட்டிக்கு வந்தார். அவருக்கு நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, ``தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் சொத்து வரியும், விலைவாசியும் உயர்ந்துவிட்டன. சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது. தற்போது மின் கட்டணமும் உயர்ந்திருக்கிறது. இதனால், பாமர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு மத்திய அரசுமீது பழி போடுவது நியாயமல்ல.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

மத்திய அரசு மூலம் அழுத்தம் வந்தபோதும்கூட தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி அ.தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின்வாரியத்துக்குத் தேவையான நிதியை அரசு மானியமாகச் செலுத்தியது. அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டதை நாங்களும் ஏற்கவில்லை. இது குறித்து அ.தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பொறுத்தவரை காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றது. ஆனால், இன்று காவல்துறையால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. அந்தத்துறை, யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், பொதுக்குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டது. அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியில் 98 சதவிகிதம் பேர் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்பதை முன்வைத்தோம். இது பன்னீர்செல்வத்துக்கும் தெரியும். கடந்த 11-ம் தேதி நடந்த பொதுக்குழு மேடையில் அவருக்கு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

ஆனால், அன்று அவர் தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டார். பொதுக்குழுவுக்கு வராமல் தலைமைக்கழக அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். தலைமைக் கழக அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டதால், பன்னீர்செல்வத்துக்கு இருந்த 2 சதவிகித ஆதரவும்கூட தற்போது இல்லை. இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 100 சதவிகித ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இருக்கிறது. அ.தி.மு.க ஒரே தலைமைதான். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்” என்றார்.