Published:Updated:

``யஷ்வந்த் சின்ஹாவை தேர்ந்தெடுத்தது எதிர்க்கட்சிகளின் அதிர்ஷ்டம்; தரமான மாற்றம் அவசியம்” - கே.சி.ஆர்

யஷ்வந்த் சின்ஹா - கே.சி.ராவ் ( ட்விட்டர் )

மோடியை வரவேற்க அமைச்சரை மட்டும் அனுப்பிவிட்டு, யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்க தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர் உட்பட அனைத்து அமைச்சர்களும் சென்றுள்ளனர்.

``யஷ்வந்த் சின்ஹாவை தேர்ந்தெடுத்தது எதிர்க்கட்சிகளின் அதிர்ஷ்டம்; தரமான மாற்றம் அவசியம்” - கே.சி.ஆர்

மோடியை வரவேற்க அமைச்சரை மட்டும் அனுப்பிவிட்டு, யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்க தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர் உட்பட அனைத்து அமைச்சர்களும் சென்றுள்ளனர்.

Published:Updated:
யஷ்வந்த் சின்ஹா - கே.சி.ராவ் ( ட்விட்டர் )

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களைச் சந்தித்துவருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு வந்திருந்தார். அதே போல இன்று தெலங்கான சென்றுள்ளார். தெலங்கான முதல்வர் கே.சந்திரசேகர ராவ் யஷ்வந்த் சின்ஹா-வை நேரில் சென்று வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

வரவேற்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா...
வரவேற்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா...
ட்விட்டர்

மேலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சந்திரசேகர் ராவ், "குடியரசுத் தலைவர் பதவிக்கு யஷ்வந்த் சின்ஹா ​​என்ற நல்ல தலைவரைத் தேர்ந்தெடுத்தது எதிர்க்கட்சிகளின் அதிர்ஷ்டம். ஹைதராபாத்தில் நாங்கள் அவரை அன்புடன் வரவேற்றோம், அனைவரும் சின்ஹாவைத் தேர்ந்தெடுக்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், இந்திய அரசியலில் ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது" எனக் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்து கே.சி.ஆர் கூட்டம்
யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்து கே.சி.ஆர் கூட்டம்
ட்விட்டர்

இன்று பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்துக்குப் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். ஆனால், தற்போது பிரதமர் மோடியை வரவேற்க மாநில அமைச்சரை மட்டும் விமான நிலையத்துக்கு அனுப்பிவிட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்க தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர் உட்பட அனைத்து அமைச்சர்களும் சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வருடத்தில் தெலங்கானா வரும் பிரதமர் மோடியை 3-வது முறையாக கே.சி.ராவ் சந்திக்காமல் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.