Published:Updated:

ஜனநாயகத்துக்கு ஓ.பி.எஸ் மகன் கொடுத்த புது விளக்கம்! - வியப்பில் ஆழ்ந்த எம்.பி-க்கள்!

பட்ஜெட் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் டெமாகிரஸிக்கு புதிய விளக்கம் கொடுத்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ரவீந்திரநாத்குமார்
ரவீந்திரநாத்குமார்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக எம்.பி-க்கள் காரசாரமாகப் பேசிவருகின்றனர். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இதைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த பின்பே, தீர்மானம் நிராகரிப்பட்ட தகவல் வெளியானது. இது தொடர்பாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினார்.

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்த பிரச்னையை எழுப்பிய தி.மு.க எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார்.

ஓ.பி.ஆர்
ஓ.பி.ஆர்

மக்களவையில் பேசிய அவர், `ஜனநாயகம் எனப் பொருள்படும் டெமாகிரஸி (Democracy) என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் கூறி, அதை மத்திய பட்ஜெட்டுடன் பொருத்தி, பொருள்படும்படி கூறினார். அவரது பேச்சைக்கண்டு அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர்.

D for Development Budget

E for Enormous Budget

M for Modernaisation Budget

O for Organized Budget

C for Corruption free Budget

R for Revolutionary Budget

A for Associated Budget

C for Cultural Budget and

Y for Young Budget என்று விவரித்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இறுதியாக இந்த பட்ஜெட் மோடி அரசின் புதிய இந்தியாவின் ஜனநாயகத்தை உணர்த்தும் வகையில் இருக்கிறது என்று புகழாராம் சூட்டினார்.