Published:Updated:

``பிறரின் ஏச்சை உரமாக்கிக்கொண்டு வளர வேண்டும்..!" - அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறிவுரை

ஓபிஎஸ்

`நம் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் திட்டுவார்கள். நாம் அதைத் தாங்கிக்கொண்டு வளர்ச்சி வேகத்தைக் கூட்ட வேண்டும்.' - ஓபிஎஸ்

``பிறரின் ஏச்சை உரமாக்கிக்கொண்டு வளர வேண்டும்..!" - அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறிவுரை

`நம் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் திட்டுவார்கள். நாம் அதைத் தாங்கிக்கொண்டு வளர்ச்சி வேகத்தைக் கூட்ட வேண்டும்.' - ஓபிஎஸ்

Published:Updated:
ஓபிஎஸ்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக அ.தி.மு.க-வினர் பிரிந்து கிடக்கின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ``பேரறிஞர் அண்ணா அவர்கள் நண்பர்களோடு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது போகிற வழியில் ஒரு பொதுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அதில் பேசிய பேச்சாளர், பேரறிஞர் அண்ணா அவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடிக்கொண்டிருந்தார். காரை நிறுத்தச் சொல்லி, ஓர் ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் முழுவதையும் கேட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

காரில் இருந்த நண்பர் அண்ணாவிடம் `ஏன் அண்ணா உங்களை அவர்கள் வசைபாடுகிறார்கள்' என்று கேட்டார். அண்ணா பதில் ஏதும் பேசாமல் மௌனம் காத்தார். கொஞ்ச தூரம் சென்ற பின்பு, ஒரு மாட்டுவண்டியை பேரறிஞர் அண்ணா அவர்களின் கார் முந்த வேண்டியிருந்தது. ஓரமாகச் செலுத்தி மாட்டுவண்டியைக் கடந்தார்கள். அப்போது மாட்டுவண்டியை ஒட்டியவர், கார் டிரைவரை நோக்கி வசைபாடினார்.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

அப்போது காருக்குள் இருந்த நண்பகர்ளிடம் போறிஞர் அண்ணா அவர்கள், `பார்த்தீர்களா... கார் வேகமாகப் போகிறது. மாட்டுவண்டியால் இதற்குச் சமமாக வர முடியவில்லை. அதுதான் கோபம். அதனால்தான் நம்மைத் திட்டுகிறார். அவருக்குச் சமமாக நாம் வசைபாடாமல், நம் வேகத்தை அதிகரித்து, போகவேண்டிய இடத்தை அடைய வேண்டும். இந்த நிலைமையில்தான் அந்தப் பேச்சாளர் இருக்கிறார். நம் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் திட்டுவார்கள். நாம் அதைத் தாங்கிக்கொண்டு வளர்ச்சி வேகத்தைக் கூட்ட வேண்டும்... பிறரின் ஏச்சை உரமாக்கிக்கொண்டு வளர வேண்டும்' என்றார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, நம் வளர்ச்சி, நமக்கு மக்களிடையே உள்ள ஆதரவு, நம்மை நாகரிகமற்ற முறையில் பேசுபவரைக் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் மக்களுடைய வெறுப்புக்கும், தொண்டர்களுடைய கோபத்துக்கும் ஆளாகியிருக்கின்றனர். அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த இயலாமைதான் நம் மேல் கோபமாக மாறியிருக்கிறது. இந்தக் கோபம்தான் நாகரிகமற்ற, பண்பாடற்ற, ஒழுங்கீனமான வார்த்தைகளை உபயோகப்படுத்த வைக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இவற்றையெல்லாம் மனதில் நிலைநிறுத்தி, அரசியல்ரீதியாக நம்மை யாராவது தாக்கினாலும், சொல்லுக்குச் சொல், வாதத்துக்கு வாதம், பேச்சுக்குப் பேச்சு என்ற அளவிலே நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக நடந்துகொள்ள வேண்டும். அதைத் தவிர, அவர்கள் அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என அ.தி.மு.க கழகத் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.