Published:Updated:

தேனி: `எதிர்க்கட்சிகளிடம் அடங்கா காளையாக இருக்க வேண்டும்!’ - ஓ.பி.எஸ் அட்வைஸ்

பன்னீர்செல்வம்

ஓரிரு நாளில் தனது தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருப்பதாகக் கூறிய ஓ.பி.எஸ்., தேர்தல் பணி தொடர்பாக, கட்சியினருக்கு அட்வைஸ் செய்தார்.

தேனி: `எதிர்க்கட்சிகளிடம் அடங்கா காளையாக இருக்க வேண்டும்!’ - ஓ.பி.எஸ் அட்வைஸ்

ஓரிரு நாளில் தனது தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருப்பதாகக் கூறிய ஓ.பி.எஸ்., தேர்தல் பணி தொடர்பாக, கட்சியினருக்கு அட்வைஸ் செய்தார்.

Published:Updated:
பன்னீர்செல்வம்

சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தேனி அருகேயுள்ள பழனிச்செட்டிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ஓ.பி.எஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``கட்சிக்கும் ஆட்சிக்கும் பொதுமக்களிடம் நல்ல பெயர் இருக்கும் இந்தத் தருணத்தில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற‌விருக்கிறது. தேர்தலுக்குக் குறுகிய காலமே இருப்பதால் அனைவரும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். தேனி மாவட்டத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வை வெற்றிபெறச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்’’ என்றார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், ``நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சில குறைகள் இருந்தன. இந்தச் சட்டமன்ற தேர்தலில் அந்தக் குறையும் இருக்கக் கூடாது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் `ஒண்ணே ஒனண்ணு கண்ணே கண்ணு’ என தேனி தொகுதி மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் களத்தில் சுறுசுறுப்பான காளை போன்று பணியாற்ற வேண்டும். நமக்குள் அடங்கிப் போகலாம் எதிர்க்கட்சிகளிடம் அடங்காத காளைகளாக, தூக்கி வீசும் காளைகளாக இருக்க வேண்டும்” என்றார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் ஓ.பி.எஸ். இந்தக் கூட்டத்தில் தேனி எம்.பி ரவீந்திரநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். `என் பெயரையோ, படத்தையோ கட்சி நிகழ்ச்சிகளில், பேனர்களில் பயன்படுத்த வேண்டாம்’ எனக் கூறி அறிக்கைவிட்ட, ஓ.பி.எஸ் இளையமகன் ஜெயபிரதீப், இந்தக் கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.