Published:Updated:

பன்னீர் - தினகரன்... துளிர்க்கும் புது நட்பு! - எடப்பாடிக்கு எதிரான `மூவ்'!

சசிகலா - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
சசிகலா - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

அரசியல் கணக்கில் தினம் தினம் புதுப்பிக்கப்படுகின்றன, கைவிட்டுப்போன பழைய நட்புகள். தனக்கு நெருங்கிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை பன்னீருக்குத் தூது அனுப்பி, பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருக்கிறார் தினகரன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பன்னீர் காட்டிய பாய்ச்சல், டி.டி.வி.தினகரனுக்கு வாய்ப்பாக மாறியிருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களாகவே வெளியே வராமல் புதுச்சேரியிலுள்ள தனது இல்லத்திலிருந்து தமிழக அரசியல் நிலவரங்களை கவனித்துவந்தார் தினகரன்.

அ.ம.மு.க-வின் பலவீனங்களை உணர்ந்திருந்தவர், வரும் தேர்தலில் தனித்து நிற்க முடியாது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். தவிர, சசிகலாவின் விடுதலை, அ.தி.மு.க-வுக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதும் தினகரனின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவர் எண்ணியதுபோலவே பஞ்சாயத்தைக் கிளப்பினார் பன்னீர். இதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள காய்நகர்த்தல்களைத் தொடங்கியிருக்கிறார் தினகரன்.

அவரது அரசியல் கணக்கில் தினம் தினம் புதுப்பிக்கப்படுகின்றன, கைவிட்டுப்போன பழைய நட்புகள். தனக்கு நெருங்கிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை பன்னீருக்குத் தூது அனுப்பி, பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருக்கிறார் தினகரன்.

"சேர்மனிடம் (பன்னீரை சேர்மன் என்றே அழைக்கிறார்) பேசுங்கள். அவரை முன்னிறுத்துவதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. எடப்பாடி செய்த துரோகத்தைவிட பன்னீர் செய்தது ஒன்றும் தவறல்ல" என்று தகவல் அனுப்பினார். அதற்கு பன்னீர் தரப்பும் இசைந்தது.

"சாருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எடப்பாடியிடம் நிறைய பட்டுவிட்டேன். இனியும் அமைதியாக இருக்க மாட்டேன்" என்று அவர் பச்சை சிக்னல் கொடுக்க, கட்சிக்குள் சத்தமில்லாமல் அடுத்தடுத்த நகர்வுகள் நடக்கின்றன.

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

கடந்த மூன்றரை ஆண்டுகளாக 'எடப்பாடியே எஜமான்' என்றிருந்த அமைச்சர்கள் பலரும் அவருக்கு எதிராகச் சத்தமில்லாமல் திரள ஆரம்பித்துள்ளனர். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, சசிகலா விடுதலை. அடுத்து, எடப்பாடியின் சமீபகால எதேச்சதிகாரப் போக்கு.

- அ.தி.மு.க-வுக்குள் சத்தமில்லாமல் யுத்த அறிகுறிகள் தென்படுகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் வெடிக்கக் காத்திருக்கிறது பெரும் பிரளயம். ஏற்கெனவே, 'முதல்வர் வேட்பாளர் யார்?' என்பதில் முட்டிக்கொள்ள ஆரம்பித்தவர்கள், சசிகலாவின் விடுதலையை முன்வைத்து போர்ப்படை அணிகளாக வாள் உரச ஆயத்தமாகிவருகிறார்கள்.

பன்னீர்செல்வத்தின் சமீபத்திய 'பார்ட் 2' யுத்தத்துக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீதான மனக்குமுறலில் இருந்த அமைச்சர்கள் பலரும் பன்னீரின் வழியாக சசிகலாவின் பின்னால் அணிதிரள ஆரம்பித்திருக்கிறார்கள். "எடப்பாடியின் எதேச்சதிகாரமும், கட்சிக்கு வலுவான தலைமை இல்லாததுமே இதற்குக் காரணங்கள்" என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள்!

> எடப்பாடியின் எதேச்சதிகாரம்!

> எடப்பாடிக்கு எதிராக இணையும் கரங்கள்

> பன்னீரின் பகடை ஆட்டம்!

> சசிகலாவா, எடப்பாடியா?

> பி.ஜே.பி பிளான்!

- இப்படி அனைத்து கோணத்திலும் உள்குத்து அரசியல் தகவல்களுடன் கூடிய ஜூ.வி கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3m4hnPp > எடப்பாடியா... சசியா? - மதில்மேல் மந்திரிகள்! https://bit.ly/3m4hnPp

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு