Published:Updated:

`ஓ.பி.எஸ் பிரசார வேனில் வேல்!’ - திருப்பதியில் பூஜைபோட்ட ஜெயபிரதீப்

ஓ.பி.எஸ் பிரசார வேன்
ஓ.பி.எஸ் பிரசார வேன்

சட்டசபைத் தேர்தலுக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்ய வாகனம் தயார் செய்யப்பட்டு, திருப்பதியில் பூஜை செய்யப்பட்டது.

இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்த ஓ.பி.எஸ்., சசிகலா பக்கம் சாய்ந்துவிடுவாரோ என எதிர்கட்சியினர் உட்பட அனைவரும் நினைத்திருந்த நேரத்தில், பிரதமர் மோடி, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கைகளைப் பிடித்து உயர்த்தினார். தேர்தல் முடியும் வரை ஓ.பி.எஸ் எந்த அரசியல் தந்திரத்தையும் கையாள மாட்டார் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டனர் கட்சி நிர்வாகிகள். இது ஒருபுறம் என்றால், ஓ.பி.எஸ் எப்போது பிரசாரத்தைத் தொடங்குவார் என்ற கேள்வியும் அவ்வப்போது எழுந்துவந்தது.

ஓ.பி.எஸ் பிரசார வேன்
ஓ.பி.எஸ் பிரசார வேன்

`நான் உரிய நேரத்தில், உரிய முறையில் பிரசாரத்தைத் தொடங்குவேன்’ என சமீபத்தில் தேனியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் கூறினார் ஓ.பி.எஸ்.

சசிகலாவுக்கு மகன் மூலம் தூது?; ஒரே சமுதாயப் பிணைப்பு! - ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்?

இந்தநிலையில், தமிழகம் முழுக்க பிரசாரம் செய்யவிருக்கும் வாகனத்தைத் தயார் செய்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன், அதை எடுத்துச் சென்று, திருப்பதியில் சிறப்பு பூஜை செய்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.

ஓ.பி.எஸ் பிரசார வேன்
ஓ.பி.எஸ் பிரசார வேன்

TN 60 AL 2345 என்ற பதிவு எண்கொண்ட ஓ.பி.எஸ் பிரசார வேனில், மஞ்சள் நிறத்தில் வேல் படம் வரையப்பட்டிருக்கிறது. அதைக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் கடும் விவாதம் எழுந்துவருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தைச் சிலர் விமர்சித்தும்வருகின்றனர். இந்தநிலையில், எப்போதும் இடம் பெறாத வேல் படம், இப்போது ஏன் ஓ.பி.எஸ் பிரசார வாகனத்தில் இடம்பெற்றிருக்கிறது என ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ``வேல் வரைவதில் என்ன தவறு இருக்கிறது? `வெற்றி வேல்... வீர வேல்....’ என்பார்கள். எடுத்த காரியம் வெற்றியுடன் முடியவே, வேல் படம் வரையப்பட்டிருக்கிறது” என்றனர்.

தேர்தல் களத்தில் இறங்க, ஓ.பி.எஸ் மட்டுமல்ல, அவரது பிரசார வேனும் தயாராகிவிட்டது.

`ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு வில்லன்’ - தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
அடுத்த கட்டுரைக்கு