Published:Updated:

`புதிய நிர்வாகிகள் பட்டியல் தயார்’ - விரைவில் பொதுக்குழு நடத்த பன்னீர் திட்டம்?!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

``ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைப் பன்னீர் செல்வம் விரைவில் கூட்ட உள்ளார். அனேகமாகச் சென்னையில் தான் அந்த கூட்டம் நடைபெறும். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்’

`புதிய நிர்வாகிகள் பட்டியல் தயார்’ - விரைவில் பொதுக்குழு நடத்த பன்னீர் திட்டம்?!

``ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைப் பன்னீர் செல்வம் விரைவில் கூட்ட உள்ளார். அனேகமாகச் சென்னையில் தான் அந்த கூட்டம் நடைபெறும். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்’

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்தை ரத்து செய்ய கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பி.வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தும், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர். தனி நீதிபதி தீர்ப்பு ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக அமைந்த நிலையில், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனவே, இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகப் பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். மேல்முறையீடு செய்வதற்காகப் பன்னீர் தரப்பு வக்கீல்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ``பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேல்முறையீட்டைத் தாண்டி ஓ.பி.எஸ் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறித்து பன்னீர் ஆதரவாளர்கள் தரப்பில் விசாரித்தோம்,

ஒபிஎஸ்
ஒபிஎஸ்

``இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி ரத்து செய்துவிட்டார். அவர் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தன்னை அறிவித்துச் செயல்பட்டு வருகிறார். ஆனால், இப்போது வரை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்படவில்லை. காலாவதி ஆகிவிட்டது என்று தான் சொல்கிறார்கள். மேலும், பன்னீர் செல்வம் மருத்துவமனையில் இருந்தபோது அதிமுகவில் ஒருசில புதிய நிர்வாகிகளை இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைத்திலிங்கம் நியமித்தார். தற்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கிளைகள் தோறும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். சரியாகச் செயல்படாத மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. புதிய பொறுப்புகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைப் பன்னீர் செல்வம் விரைவில் கூட்ட உள்ளார். அனேகமாகச் சென்னையில் தான் அந்த கூட்டம் நடைபெறும். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். கன்னியாகுமரியில் 90 சதவீத அதிமுகவினர் எடப்பாடி ஆதரவாளர் தளவாய் சுந்தரத்திற்கு எதிராக உள்ளனர். அவர்கள் விரைவில் ஓ.பி.எஸ் பக்கம் வர உள்ளனர். பல மாவட்டங்களிலும் இதேநிலை தான் இருந்து வருகிறது. இதேபோல், மாவட்டங்களில் நிர்வாகிகளை நேரடியாகப் போய் சந்திக்கவும், திருச்சி, மதுரையில் பொதுக்கூட்டத்தை கூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என்றனர்.