Published:Updated:

`ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம்!' - தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான்

ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவாதம் வலுப்பெற்றிருக்கும் நிலையில், ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக தேனி மாவட்டம் முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

`ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம்!' - தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவாதம் வலுப்பெற்றிருக்கும் நிலையில், ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக தேனி மாவட்டம் முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

Published:Updated:
ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க தலைமைக்கு பெரும் போராட்டம் நடந்து வருகிறது. ஒருபுறம் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ், பனிப்போர் நடந்துவரும் நிலையில், சகிகலாவும் தன்னை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எனக் கூறிக் கொண்டு, அ.தி.மு.க கொடியுடன் ஆன்மிகச் சுற்றுலா சென்றுவருகிறார். தினகரன் அ.ம.மு.க என்ற கட்சியை உருவாக்கி அ.தி.மு.க-வை மீட்கப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்.

பேனர்
பேனர்

இதற்கிடையே அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ன் பெரியகுளம் பண்ணை வீட்டில் வைத்து சசிகலா, தினகரனை கட்சியில் இணைப்பது தொடர்பான தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அவரின் தம்பி ஓ.ராஜா சசிகலாவை சந்தித்ததற்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் கோபமடைந்து ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் விமர்சித்துப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போஸ்டர்
போஸ்டர்

இவ்வாறு அ.தி.மு.க-வில் சலசலப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்க, தமிழ்நாடு அரசியல் களத்தில் தொடர்ந்து பின்னடைவையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் அ.தி.மு.க தன்னுடைய கோட்டையெனக் கூறிவந்த இடங்களில்கூட தோல்வியைத் தழுவியது. மேலும் எதிர்க்கட்சியாக இருந்தும் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுப்பது, ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பது என பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் தங்களுக்குள் போட்டிக் கொண்டிருகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி போல செயல்பட தொடங்கிவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தகைய சூழலில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

பேனர்
பேனர்

இந்நிலையில் ஒற்றைத் தலைமையை ஏற்று கட்சியை வழி நடத்த வருமாறு ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க-வினர் போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும் வருகின்றனர். அதில், `முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலரே! ஒற்றைத் தலைமை ஏற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள்' என தேனி-அல்லிநகரம் நகர் கழகம் சார்பில் நகரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதே போன்று போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களால் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக போடியில், `ஜூன் 23-ம் தேதி அ.தி.மு.க பொதுச்செயலாளராகப் பதவியேற்கும் ஓ.பி.எஸ்-க்கு வாழ்த்துகள்!' எனக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர்  சையதுகான்
தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான்

இது குறித்து அ.தி.மு.க தேனி மாவட்டச் செயலாளர் சையதுகானிடம் பேசினோம். ``ஓ.பி.எஸ் பொதுச்செயலாளராக வேண்டும் என்பது தேனி, ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க-வினர் விருப்பம் மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் அவரை வரவேற்று வாழத்துக் கூறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ் பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்பது அனைத்து மாவட்ட தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. இருப்பினும் பொதுக்குழுவில்தான் முடிவுசெய்யப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism