Published:Updated:

``ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார் என்பது மக்களுக்குத் தெரியும்!" - ஓபிஎஸ் காட்டம்

ஓபிஎஸ் - அதிமுக

``இதுவரை நான் கடுமையான சொல்லை யாரைப் பார்த்தும் சொன்னதில்லை. முதலமைச்சர் ஸ்டாலினை நான் சந்தித்ததாக அவர்கள் சொல்வதை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகத் தயார்." - ஓபிஎஸ்

``ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார் என்பது மக்களுக்குத் தெரியும்!" - ஓபிஎஸ் காட்டம்

``இதுவரை நான் கடுமையான சொல்லை யாரைப் பார்த்தும் சொன்னதில்லை. முதலமைச்சர் ஸ்டாலினை நான் சந்தித்ததாக அவர்கள் சொல்வதை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகத் தயார்." - ஓபிஎஸ்

Published:Updated:
ஓபிஎஸ் - அதிமுக

மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தேவர் தங்கக் கவச வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி நடப்போம்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் சிலர் நீதிமன்றம் செல்ல முயல்கிறார்கள். அந்த வழக்கு முடியும்வரை அதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

தி.மு.க-வின் `பி’ டீம் என என்னைச் சொல்கிறார்களா... யார்மீது குற்றம் என தமிழக மக்களுக்குத் தெரியும். நேற்று நான் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்ததாக அவர் (இபிஎஸ்) குற்றம்சாட்டியிருக்கிறார்.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

இதுவரை நான் கடுமையான சொல்லை யாரைப் பார்த்தும் சொன்னதில்லை. முதலமைச்சர் ஸ்டாலினை நான் சந்தித்ததாக அவர்கள் சொல்வதை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகத் தயார். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி விலகத் தயாரா என்று நான் கேட்டிருக்கிறேன். அதற்கு உரிய பதிலை அவர் முதலில் சொல்லட்டும்.

அ.தி.மு.க., தொண்டர்களின் இயக்கம். அப்படித்தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் 50-ம் ஆண்டு நிறைவுவிழாவைக் கொண்டாடிவரும் இந்த நேரத்தில், கட்சிக்குள் விரும்பத்தகாத பிரச்னைகளை உருவாக்கியது யார் எனத் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.

ஓபிஎஸ் - அதிமுக
ஓபிஎஸ் - அதிமுக

இவ்வளவு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு அடுத்தவர் மீது பழி போடுவது ஏற்புடையது அல்ல. மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார் என்றும், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்றும் மக்களுக்கும்... அரசியல் தெரிந்தவர்களுக்கும் நன்கு தெரியும். என்னைப் பற்றி தொண்டர்களுக்குத் தெரியும். தொண்டர்களைப் பற்றி எனக்குத் தெரியும். தொண்டர்களை உரிய நேரத்தில் உரிய முறையில் சந்திப்பேன். அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டும் என்பதுதான் என்னுடைய உறுதியான எண்ணம்" என்றார்.