Published:Updated:

``எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வது உறுதி!" - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

புகழேந்தி

``துரோகத்தின் உச்ச​மான​​​​​ எடப்பாடி​யிடம் இருப்பவர்கள் எடப்பாடிக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான்." - புகழேந்தி

``எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வது உறுதி!" - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

``துரோகத்தின் உச்ச​மான​​​​​ எடப்பாடி​யிடம் இருப்பவர்கள் எடப்பாடிக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான்." - புகழேந்தி

Published:Updated:
புகழேந்தி

கடந்த ​ஜூலை 11-ம் தேதி கூட்டிய அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என நீதிமன்றம் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதை அடுத்து, அவர் சொந்த ஊரான பெரியகுளத்துக்கு வந்தார். அங்குள்ள பண்ணை வீட்டில் வைத்து தன் ஆதரவாளர்களைச் சந்தித்துவருகிறார். இந்த நிலையில், இன்று காலை ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி அவரைச் சந்தித்தார். ஓ.பன்னீர்செல்வத்தி​ன் மனைவி முதலாமாண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு அவரின் ​உ​ருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

​அப்போது​,​ ​​``எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் அ.தி.மு.க-வின் மன்னனாக மகுடம் சூட முடியாது. ஐந்த​​ரை அறிவுள்ள எடப்பாடி பழனிசாமி உடனிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரைத் தவறாக வழிநடத்திச் செல்​கின்றனர். அ.தி.மு.க கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னம் முடங்குகிறது என்றால் அதற்குக் காரணம் பிசாசு கே.பி.முனுசாமி, அரசியல் பச்சோந்தி கே​.​பி​.​முனுசாமி​தான்.

​முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு ​தவறுதலாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ததுதான் இப்போதைய அரசியல் ​நிலைக்குக் காரணம்​ ​என வி​.​கே​.​சசிகலா பலமுறை கூறி வருத்தப்பட்​டார். எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்குப் போவது உறுதி... அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறைக்குச் செல்வார்கள், அதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கெல்லாம் மிகப்பெரிய ஊழல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

​தேர்தலின்போது அவசர அவசரமாக 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை தற்காலிகம் என​க் ​கூறி தென்மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டதால் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க பெரும் தோல்வியைச் சந்தித்தது​.​ இதற்குக் காரணம் முன்னாள் அமைச்சர் ஆர்​.​பி​.​உதயகுமார், எடப்பாடி பழனிசாமிதான். இரட்டை இலை முடங்கினாலும்... கட்சியே போனாலும் பரவாயில்லை, சுயேச்சையாக நின்று எடப்பாடி பழனிசாமி வரும் தேர்தலைச் சந்திக்க திட்டம் தீட்டியிருக்கிறார்.

புகழேந்தி
புகழேந்தி

துரோகத்தின் உச்ச​மான​​​​​ எடப்பாடி​யிடம் இருப்பவர்கள் எடப்பாடிக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான். அவரும், அப்போதைய காவல்துறை உயரதிகாரிகளும் இதில் கைதுசெய்யப்பட வேண்டும்​.​ இது போன்று கொடநாடு வழக்கு, ஊழல் வழக்கு அனைத்து விஷயங்களும் ​வெளிவரும்" என்றார்.