Published:Updated:

​``சசிகலா காலில் விழுந்து பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமிதான் துரோகி!" - தேனி சையதுகான் காட்டம்

சையதுகான்

``சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, அவருக்கு துரோகம் செய்தவர். ஆனால் ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சராக்கப்பட்ட பிறகும் அவரிடம் திரும்பப் பதவியை கொடுத்தவர்தான் ஓ.பி.எஸ்." - சையதுகான்

​``சசிகலா காலில் விழுந்து பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமிதான் துரோகி!" - தேனி சையதுகான் காட்டம்

``சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, அவருக்கு துரோகம் செய்தவர். ஆனால் ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சராக்கப்பட்ட பிறகும் அவரிடம் திரும்பப் பதவியை கொடுத்தவர்தான் ஓ.பி.எஸ்." - சையதுகான்

Published:Updated:
சையதுகான்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் தங்கியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ‌.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றார். அப்போது அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் ஒபிஎஸ்-யிடம் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ``பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஓ.பி.எஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் அதனை ஏற்காத எடப்பாடி பழனிசாமி, தனக்குப் பதவி ஆசை இல்லை எனவும், உழைக்காமல் கட்சியில் பொறுப்பு கேட்கும் ஓ.பி.எஸ் ஒரு துரோகி... அவருடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறினார்.

ஆனால், உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிதான் துரோகி. சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, அவருக்கு துரோகம் செய்தவர். ஆனால் ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சராக்கப்பட்ட பிறகும் அவரிடம் திரும்பப் பதவியை கொடுத்தவர்தான் ஓ.பி.எஸ். பணத்தாசை பிடித்த எடப்பாடி பழனிசாமிதான் துரோகத்திற்கு பெயர் போனவர்.

ஓபிஎஸ்-சையதுகான்
ஓபிஎஸ்-சையதுகான்

மேலும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்கு ஓ.பி‌.எஸ்-தான் காரணம் எனக் குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி, திட்டமிட்டே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை தோற்கவைத்தார். அவருடைய ஆதரவாளர்கள் வெற்றிக்கு மட்டுமே வேலை செய்தார்.

அ.தி.மு.க-வில் உண்டான பிளவின் காரணமாகவே நடந்து முடிந்த சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி தோல்வியடைந்தது. அதனால்தான் சசிகலா, தினகரன் என பிரிந்து சென்றவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்கிறோம்.‌ அதையேதான் ஓ.பி.எஸ்-ம் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால் கட்சி ஒற்றுமையுடன் இருப்பதை விரும்பாத எடப்பாடி பழனிசாமி, அதற்கு முட்டுக்கட்டை போட்டு அ.தி.மு.க-வை தன்வசப்படுத்த நினைக்கிறார். எம்‌.ஜி.ஆர் கண்ட ஒற்றுமையான அ.தி.மு.க மீண்டும் செயல்பட வேண்டும்.

அ.தி.மு.க-வில் தினகரன், சசிகலாவை இணைக்க வேண்டும் என்று தேனி மாவட்ட அ.தி.மு.க-வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தற்போதுவரை உறுதியாக இருக்கிறோம்.

ஓபிஎஸ்-சையதுகான்
ஓபிஎஸ்-சையதுகான்

ஓ.பன்னீர்செல்வத்தை பசுத்தோல் போத்திய புலி என்று ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். உன்மையிலேயே ஓ.பன்னீர்செல்வம் குணத்தில் பசுதான், ஆனால் அவர் புலியாக மாறி எதிரிகளை எல்லாம் அடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.