Published:Updated:

``எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக-வில் இருப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை!” - வைத்திலிங்கம் காட்டம்

வைத்திலிங்கம்
News
வைத்திலிங்கம்

``2026-ம் ஆண்டு வரை ஓ.பி.எஸ்-தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர் என இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷன் ஆவணப்படி, தமிழக தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியிருக்கிறது." - வைத்திலிங்கம்

``எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக-வில் இருப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை!” - வைத்திலிங்கம் காட்டம்

``2026-ம் ஆண்டு வரை ஓ.பி.எஸ்-தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர் என இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷன் ஆவணப்படி, தமிழக தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியிருக்கிறது." - வைத்திலிங்கம்

Published:Updated:
வைத்திலிங்கம்
News
வைத்திலிங்கம்

ஓ.பன்னீர்செல்வம் அணியிலுள்ள வைத்திலிங்கம், தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருப்பி அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், ``அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில் கொண்டுவந்த சட்ட விதிப்படி தொண்டர்களால்தான் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தச் சட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் மீற முடியாது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 21-ம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தப் பதவிகளின் காலம் ஆறு வருடங்கள். பொதுக்குழுவுக்கும் செயற்குழுவுக்கும் அதை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டி இடைக்காலப் பொதுச்செயலாளர் என அறிவித்தார்கள்.

ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம்
ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம்

அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் ஜெயச்சந்திரன் அதைச் செல்லாது என அறிவித்தார். நீதியரசர்கள், `பொதுக்குழு செல்லும். ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பற்றி நாங்கள் கருத்து சொல்வதற்குத் தயாராக இல்லை. நீங்கள் உரிமையியல் நீதிமன்றத்துக்குச் சென்று பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளுங்கள்' எனச் சொல்லிவிட்டார்கள்.

இந்த நிலையில், இப்போது தேர்தல் கமிஷன் முறையாகக் கடிதம் அனுப்பியிருக்கிறது. 2026-ம் ஆண்டு வரை ஓ.பி.எஸ்-தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர் என இந்திய தலைமை தேர்தல் கமிஷன் ஆவணப்படி, தமிழக தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் சட்ட விதியின்படி சரியானது.

அதை ஏற்காமல் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருப்பி அனுப்பினால் அ.தி.மு.க-வைவிட்டுச் சென்றுவிட வேண்டும். தனிக்கட்சி தொடங்கிக்கொள்ளலாம். ஆனால், அ.தி.மு.க-வில் இருப்பதற்கு எந்தத் தகுதியும் இவர்களுக்கு இல்லை என்பது என் கருத்து" என்றார்.