Published:Updated:

தேனி: பொதுக்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ்-ஐ அவமதித்ததாகக் கூறி இபிஎஸ் உருவ மொம்மை எரிப்பு! 

உருவ பொம்மை எரிப்பு

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடி பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, அவரின் உருவபொம்மையை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எரித்தனர்.

தேனி: பொதுக்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ்-ஐ அவமதித்ததாகக் கூறி இபிஎஸ் உருவ மொம்மை எரிப்பு! 

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடி பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, அவரின் உருவபொம்மையை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எரித்தனர்.

Published:Updated:
உருவ பொம்மை எரிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு அ.தி.மு.க-வில் குழப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஒருபுறம் சசிகலா தன்னை பொதுச்செயலாளர் எனக் கூறிக்கொண்டு கட்சிக் கொடியுடன் காரில் ஆன்மிகப் பயணம் செய்துகொண்டிருக்கிறார். தற்போது இரட்டைத் தலைமை காரணமாக கட்சி முழு வேகத்தோடு செயல்பட முடியவில்லை எனக்கூறி கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற புயல் கிளம்பியது.

இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு
இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமை தொடரவேண்டும் எனக்கூற, எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், இன்று சென்னையில் அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்தது முதலே ஓ.பி.எஸ்-க்கு எதிராகவும், அவரை அவமதிக்கும் விதமாகவும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் நடந்து கொண்டனர். குறிப்பாக அவரை மண்டபத்திலிருந்து வெளியேறும்படி கூச்சலிட்டனர். அவர் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

ஒரு வழியாக கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதில் தீர்மானங்கள் அனைத்தையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பு செய்துவிட்டனர். ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடி அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றி ஒற்றைத் தலைமைக்கான முடிவும் எடுக்கப்படும் எனப் பேசப்பட்டது. அதுவரை பொறுமையாக மேடையில் அமர்ந்திருந்த ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் மேடையிலிருந்து புறப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின்மீது சிலர் தண்ணீர் பாட்டில்கள் வீசி, `ஒழிக... ஒழிக!' எனக் கோஷமிட்டனர். மண்டபத்தைவிட்டு வெளியேறும்வரை இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர் வந்த பிரசார வாகனத்தின் டையரை பஞ்சராக்கியுள்ளனர். இதனைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓ‌.பி.எஸ்-ன் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உருவ பொம்மை
உருவ பொம்மை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில், அ.தி.மு.க ஒன்றியம் சார்பில் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துவந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், கிராம சாவடி அருகே வந்து தரையில் போட்டு காலால் மிதித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.

போலீஸார் தடுப்பு
போலீஸார் தடுப்பு

அதே போல் ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியிலும் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தீ வைத்து எரித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை மும்முனை சந்திப்பில் கூடிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, திடீரென மறைத்து வைத்திருந்த எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை எரிக்க விடாமல் கைப்பற்றினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.

பெரியகுளத்தில் ஆர்ப்பாட்டம்
பெரியகுளத்தில் ஆர்ப்பாட்டம்

இதே போன்று பெரியகுளம் பகுதியில் உள்ள தேனி எம்.பி ரவீந்திரநாத் அலுவலகம் முன்பாக கூடிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வலுக்கும் போராட்டத்தால் பரபரப்பு நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism