Published:Updated:

கொரோனா: ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு பாசிட்டிவ்! - மனைவிக்கும் தொற்று உறுதி

ஓ.ராஜா
ஓ.ராஜா

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, கொரோனா தொற்று பாதிப்பால், மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எனத் தொடச்சியாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவரும் சூழல் இருக்கிறது. இந்தநிலையில், தேனி மாவட்ட ஆவின் தலைவரும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா, கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓ.ராஜா
ஓ.ராஜா

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் குடும்பத்தினர், தேனி மாவட்டம் பெரியகுளத்தில்தான் தங்கியுள்ளனர். கடந்த 10 நாள்களாகப் பெரியகுளத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 21-ம் தேதியே பெரியகுளம் நகராட்சிப் பகுதிக்கு மட்டும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் இருந்து தேனி வந்த ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளத்தில் தங்காமல், மூன்று நாள்கள், தனது தொகுதியான போடியில் வாடகை வீடு எடுத்து தங்கினார். அந்த அளவுக்கு பெரியகுளத்தில் கொரோனா தக்கம் அதிகமாக இருந்தது.

பெரியகுளம் வீட்டுக்குச்  செல்லாத ஓ.பி.எஸ்! -போடி வாடகை வீட்டில் தங்குவது ஏன்?

இந்நிலையில், நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட பரிசோதனைகளில், ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவும் ஒருவர். பரிசோதனிகள் முடிவுகள் நேற்று வந்துள்ளன. அதில், ஓ.ராஜாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் கிடைத்துள்ளது. அதை அடுத்து, நேற்று இரவே, மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு ஓ.ராஜா கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதை அடுத்து ஓ.ராஜா வீட்டில் உள்ள அவரின் மனைவி மற்றும் இரண்டு உறவினர்களுக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர்களுக்கும் கொரோனா உறுதியானது. தொடர்ந்து மூவரும் பெரியகுளத்தில் உள்ள கொரோனா வார்டில் முதற்கட்ட சிகிச்சை எடுத்த பின்னர், அவர்களும் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஓ.ராஜா
ஓ.ராஜா
சிறந்த நீர் மேலாண்மைக்கான `ஸ்கோச் கோல்டு’ விருது! அசத்திய தேனி மாவட்டம்

இது தொடர்பாக ஓ.பி.எஸ் சகாக்கள் சிலர் நம்மிடம் பேசியபோது, ``கொரோனா ஆரம்பித்ததில் இருந்து ஓ.பி.ஸ் குடும்ப உறுப்பினர்களோ, ஓ.ராஜா குடும்ப உறுப்பினர்களோ வெளியே ஊர் பயணம் எதும் செய்யவில்லை. மேலும், அடிக்கடி குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. ஓ.ராஜா மட்டும், அவரின் மாமனார் ஊரான போடேந்திரபுரம் சென்று வருவார். இப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு