Published:Updated:

`என்ன நடந்தாலும் கட்சியை விடக் கூடாது’- ராகுல் காந்தி குறித்து வருந்தும் சல்மான் குர்ஷித்

காங்கிரஸின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், கட்சியின் தற்போதைய நிலை மற்றும் ராகுல் காந்தி குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

ராகுல் - சல்மான்
ராகுல் - சல்மான்

இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதற்குப் பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், இவரின் பதவி விலகலை மற்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை. பல போராட்டங்கள், சர்ச்சைகள், குழப்பங்களுக்கு மத்தியில், `தான் ராஜினாமா செய்வது உறுதி' என அறிவித்து பதவியைத் துறந்தார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கடந்த சில காலங்களாகவே காங்கிரஸ், பல்வேறு பிரச்னைகளையும் தேர்தலில் கடுமையான தோல்வியையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸின் இந்த நிலைக்கு ராகுலின் ராஜினாமாவே காரணம் எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்.

எஸ்.பி.ஜி புகார்; கம்போடியாவே கடைசி! - ராகுலின் வெளிநாடு டிரிப்புக்குக் கெடுபிடி காட்டும் மத்தியஅரசு

ஏ.பி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள சல்மான், ``நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து நாங்கள் சரியாக விவாதிக்கவில்லை. எங்கள் தலைவர் பதவி விலகியதுதான் எங்களின் மிகப் பெரிய பிரச்னை. அவர் ராஜினாமா செய்த பிறகு காங்கிரஸில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

தற்போது சோனியா காந்தி தலைவராக இருந்தாலும் அவர் இடைக்கால தலைவராக மட்டுமே செயல்பட்டு வருகிறார். இனிமேலும் இந்த நிலை தொடரக் கூடாது என நான் விரும்புகிறேன். காங்கிரஸின் தற்போதைய நிலையை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. என்ன நடந்தாலும் நாம் கட்சியை விட்டுவிடக் கூடாது.

ராகுல் காந்தி கட்சியின் தலைவராக இல்லை என்றாலும் தற்போதுவரை அவர்தான் எங்களின் முதன்மையான தலைவராக உள்ளார். வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தாலும், ராகுலால்தான் தொண்டர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காமல் உள்ளனர்.

சல்மான் குர்ஷித்
சல்மான் குர்ஷித்

அவர் மட்டும் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் கட்சியின் தோல்விக்கான காரணங்களை நாங்கள் புரிந்து கொண்டிருப்போம். வரவுள்ள காலங்களில் மிகப்பெரும் போர்களை எதிர்த்துப் போராட, தயாராக இருப்போம்” என சல்மான் குறிப்பிட்டுள்ளார்.