Published:Updated:

சைபர் வாரில் வம்பிழுக்கும் பாகிஸ்தான்

ஹேக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
ஹேக்கிங்

மோடிக்கு எதிரான பதிவுகள்... பாரத் எர்த் மூவர்ஸ் ஹேக்கிங்

சைபர் வாரில் வம்பிழுக்கும் பாகிஸ்தான்

மோடிக்கு எதிரான பதிவுகள்... பாரத் எர்த் மூவர்ஸ் ஹேக்கிங்

Published:Updated:
ஹேக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
ஹேக்கிங்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியா போர் நடத்திக்கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில், எல்லையில் நேருக்கு நேர் மல்லுக் கட்டுகிறது சீனா.

அதேசமயம் நேரடியாக அல்லாமல் இந்தியாவுக்கு எதிராக ‘சைபர் வார்’ தாக்குதலில் இறங்கி யிருக்கிறது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனம்.

கடந்த மாதம் அமீரக நாடுகளின் சமூக வலைதளக் கணக்குகளிலிருந்து பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறுப் பதிவுகள் டிரெண்டிங் செய்யப்பட்டன. இதில் ஓமன் நாட்டு இளவரசியின் பெயரில்கூட சில எதிர்ப்புப் பதிவுகள் வெளியாகியிருந்தன. இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தனிப்படைகள் களமிறங்கி விசாரித்ததில், ஓமன் நாட்டு இளவரசியின் ட்விட்டர் கணக்கு உட்பட பெரும்பாலான பயனர் கணக்குகள் போலியாக உருவாக்கப்பட்டவை என்றும், இந்த நெகட்டிவ் டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ இருப்பதும் தெரியவந்தது. உலக அரங்கில் இந்தியாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க, பாகிஸ்தான் எடுத்திருக்கும் நவீன ஆயுதம்தான் சைபர் வார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது மட்டுமல்ல... மற்றுமொரு சைபர் அட்டாக்கும் பாதுகாப்புத்துறையை அதிரவைத்துள்ளது. இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானது, பெங்களூரைத் தலைமையிடமாகக்கொண்ட `பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்’ (BEML). இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனம் ராணுவம், ரயில், மின்சாரம் மற்றும் சுரங்கத்துறைகளில் சேவைகளை வழங்கிவருகிறது. இந்திய ராணுவத்தின் கனரக ஊர்திகள், ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வாகனங்கள், ‘Mine Plough’ எனப்படும் கண்ணிவெடிகளை அகற்றியபடி முன்னேறிச் செல்லும் தளவாட ஊர்தி, போர் விமானங்களில் ஆயுதங்களை ஏற்றிப் பொருத்தும் சுமை ஊர்தி உட்பட பல தயாரிப்புகளை இந்திய அரசுக்காக இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதன் தயாரிப்புகள் 56 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1965-ம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாயாக இருந்த இந்த நிறுவனத்தின் இன்றைய வணிகம் ஆண்டுக்கு 3,500 கோடி ரூபாய். இந்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்குத் தூணாக இருந்துவரும் இந்த நிறுவனமும் பாகிஸ்தானின் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் இணைய தளம், மே மாதம் இரண்டாம் வாரத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இங்கு பணிபுரியும் ஏழு நபர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் ஊடுருவிய ஹேக்கர்கள், தகவல்களைத் திருடி `டார்க் வெப்’ எனப்படும் இருள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். வெளியான விவரங்களில் பணியாளர்களுக்கு இடையேயான மின்னஞ்சல் உரையாடல்கள், வாடிக்கையாளர் விவரங்கள், வணிக ரசீதுகள், குறிப்பாணைகள் என முக்கியத் தகவல்களும் அடக்கம். ‘R3dr0x’ என்ற ஹேக்கரின் கணக்கில் வெளியாகியுள்ள இந்தத் தகவல்களின் பாஸ்வேர்டுகள் இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் எதிரான வாசகங்களாக வைக்கப்பட்டுள்ளன.

ஹேக்கிங்
ஹேக்கிங்

பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் இணையப் பொதுவெளியில் வெளியானது நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் கசிவை முதலில் கண்டறிந்த அமெரிக்க இணையப் புலனாய்வு நிறுவனமான சைபில் (Cyble) `இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த ஹேக்கர்களை சைபில் நிறுவனம் தரப்பில் தொடர்புகொண்டபோது, “இந்திய அரசு தனது சமீபத்திய சில நடவடிக்கை களுக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாகவே இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளோம்” என்று ஹேக்கர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேசமயம் பாரத் எர்த் மூவர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஹேக் செய்யப்பட்டு வெளியான தகவல்கள் அனைத்தும் வகைப்படுத்தப்படாத தகவல்களே (Non Classified). தாக்குதல் தெரியவந்ததும் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன. அந்த மின்னஞ்சல் கணக்குகளுடன் தொடர்பிலிருந்த அனைத்துக் கணினிகளும் நெட்வொர்க் இணைப்பி லிருந்து துண்டிக்கப்பட்டு விட்டன. உயர்மட்டக்குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.

டிஜிட்டல் தகவல்களைக் கையாள்வதில் இந்தியாவின் பாதுகாப்புத்திறனை இந்தத் தாக்குதல் கேள்விக்குறியாக்கியுள்ளது. மக்கள் மற்றும் பணியாளர்களிடத்தில் இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை சேவையகங்களில் (Servers) நிறுவுவதன் மூலம் இது போன்ற தாக்குதல்களை வரும் காலங்களில் தவிர்க்கலாம் என்பதுதான் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism