Published:Updated:

சசிகலாவுக்கு ஆதரவாகப் பன்னீர்... தேவர் ஜெயந்தியில் புதுத் திட்டம்?! #VikatanExclusive

மூன்று தினங்களுக்கு முன்பு பன்னீர் பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையாத நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக அடுத்த அஸ்திரத்தை பன்னீர் கையில் எடுத்திருக்கிறார்.

``சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் சேர்ப்பது குறித்துக் கட்சியின் தலைமை முடிவெடுக்கும்” என்று மூன்று தினங்களுக்கு முன்பு பன்னீர் பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையாத நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக அடுத்த அஸ்திரத்தை பன்னீர் கையில் எடுத்திருக்கிறார்.

சசிகலா
சசிகலா

2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்து பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. அ.தி.மு.க-வில் நிலவிய சில குழப்பமான நடவடிக்கைகளால் அடுத்த சில மாதங்களில் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியும், கட்சியின் தலைமை இனி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் வசமே இருக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதில் சசிகலா தரப்புக்கு எதிராக எடப்பாடி தரப்பும், செம்மலை, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் எதிர்தரப்புவாதிகளாக ஆஜரானார்கள். இந்த வழக்கு நீண்ட நாள்கள் விசாரணையில் இருந்துவந்து தற்போது விசாரணை முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது. கடந்த 23-ம் தேதி அன்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதம் நடந்தது. அன்று எடப்பாடி தரப்பிலும், செம்மலை தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கொண்டாட முடியாது என்று வாதிட்டனர். பன்னீர் தரப்பில் வழக்கறிஞர் வாதம் வைக்க முயன்றபோது நேரம் கடந்துவிட்டதால் 27-ம் தேதி (இன்று) வழக்கு விசாரணைக்கு வரும் என்றும், அன்று பன்னீர் வழக்கறிஞர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு மறுதினமே பன்னீர், சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க அ.தி.மு.க-வுக்குள் இது புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.

``சசிகலா கால்ல விழுந்தது யார்?" - ஆவேசப்பட்ட ஓபிஎஸ்; அதகளமாகும் அதிமுக!
எடப்பாடி - பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

இந்த நிலையில் 27-ம் தேதி அன்று பன்னீர் தரப்பு நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிராகக் கருத்துகளை முன்வைக்குமா என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இன்று காலை சென்னை மாநகர நான்காவது நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணையில் பன்னீர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் “இந்த வழக்கில் எங்கள் தரப்பு வாதத்தை வைக்க அவகாசம் வேண்டும். தீபாவளிக்குப் பிறகு வழக்கை ஒத்திவையுங்கள்” என்று கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் பத்தாம் தேதி அன்று வழக்கை நீதிபதியும் ஒத்திவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

ஏற்கெனவே சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர் கருத்து தெரிவித்த நிலையில், இப்போது சசிகலாவுக்கு எதிரான வழக்கில் பன்னீர் தரப்பு பின்வாங்கியது பெரும் அதிர்வை அ.தி.மு.க-வுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. 29-ம் தேதி தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் செல்லவிருக்கிறார் சசிகலா. அதற்கு முன்பாக பன்னீரி்ன் பாய்ச்சல் சசிகலாவை நோக்கி இருக்கும் என்கிறார்கள் பன்னீர் தரப்பினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு