Published:Updated:

சேலம்: பேரூராட்சித் தலைவருக்கு சாலையை மறித்து கேக் வெட்டிய திமுக-வினர் -அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்!

பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க பிரமுகர்

திமுக பேரூராட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்தக் கட்சியினர் சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவருக்கு கேக் வெட்டிக் கொண்டாடினர்.

சேலம்: பேரூராட்சித் தலைவருக்கு சாலையை மறித்து கேக் வெட்டிய திமுக-வினர் -அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்!

திமுக பேரூராட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்தக் கட்சியினர் சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவருக்கு கேக் வெட்டிக் கொண்டாடினர்.

Published:Updated:
பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க பிரமுகர்

சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சித் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த அன்பழகன் இருந்துவருகிறார். இவர் தி.மு.க-வின் ஒன்றிய துணைச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அன்பழகன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். இதை முன்னிட்டு, சேலம்-உளுந்தூர்பேட்டை நான்குவழிச் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஏத்தாப்பூர் மேம்பாலம் சுரங்கப்பாதையில் வழியை மறித்து சாலையின் நடுவே டேபிள் போட்டு அன்பழகனின் ஆதரவாளர்கள், கேக் வெட்டி அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினர்.

இதன் காரணமாக சுரங்கப்பாதை வழியாக ஆத்தூரிலிருந்து கருமந்துரை சென்ற அரசுப் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிறந்தநாள்  கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்

மேலும், 100-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் சாலையை மறித்து நடனமாடியபடி, அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கொண்டாடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், ``பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையை மறித்து அடாவடித்தனமாக பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். கேட்டால் ஆளுங்கட்சிக்காரர்கள் என்கிறார்கள். இவர்களின் அராஜகத்தை காவல்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இது கண்டிக்கத்தக்கது" எனக் கொதிக்கின்றனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர்.