Published:Updated:

``பேரறிவாளனைப் போல மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்!" - பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்

``பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல, மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்." - பழ.நெடுமாறன்.

``பேரறிவாளனைப் போல மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்!" - பழ.நெடுமாறன்

``பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல, மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்." - பழ.நெடுமாறன்.

Published:Updated:
பழ.நெடுமாறன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலைசெய்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர், விளார் கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது வரவேற்கத்தக்கத்து, உன்னதமானது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பேரறிவாளன் போல, சிறையிலுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மேற்கொள்ளவார் என நம்புகிறேன்.

பேரறிவாளன் விடுதலை
பேரறிவாளன் விடுதலை

1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கு, தடா நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நடைபெற்றது. அதில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி, தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்வதேச மனித அமைப்புகள் உள்ளிட்டவை இந்த தீர்ப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தன. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யரும் இதைக் கண்டித்துள்ளார். அதன் பின்னர், என் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில்,19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து 4 பேரின் தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியுடம் கருணை மனுத் தாக்கல் செய்தோம். அதனை அவர் ரத்து செய்தார். எங்களது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்துரு, `அரசியல் சட்டத்தின்படி அமைச்சரவை என்ன பரிந்துரை செய்கிறதோ, அதனை ஏற்றுச் செயல்பட வேண்டியது ஆளுநரின் பொறுப்பு. அவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது!' எனத் தெரிவித்தார்.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜென்ரல்,`1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி முதல் அரசியல் சட்டம் அமலுக்கு வந்ததற்குப் பிறகு, 52 ஆண்டுகளாக எந்த மாநில அமைச்சரவையும் கூடி தண்டனைக் குறைப்பு வழக்கில் முடிவு செய்யப்படவில்லை. ஆளுநர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார்கள்' எனத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த சந்துரு, `இத்தனை ஆண்டுக்காலமாக அரசியல் சட்டத்தை மீறி உள்ளோம் என ஒப்புக்கொண்டுள்ளீர்கள்' எனத் தெரிவித்ததால், ஆளுநரின் உத்தரவு செல்லாது என உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், தற்போதுள்ள தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு மாறாகச் செயல்பட்டிருக்கிறார். இந்தத் தவறு திருத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால், விடுதலையான 19 பேரும் தூக்கு மேடைக்குச் சென்றிருப்பார்கள். எனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கு பொய் வழக்கு என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடுத்துக் காட்டியுள்ளது. எனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல, மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும், குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமானத்துடன் நிதியுதவி வழங்கி, அவர்களுக்கான வாழ்வை அமைத்துத் தர வேண்டும். அதேபோல, 25 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism