Published:Updated:

``அன்று ராஜபக்சேவை அமர வைத்தவர்கள்... இன்று வெளியேறச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்!" - பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன் பத்திரிகையாளர் சந்திப்பு

`ஆளுநர் என்பது அலங்கார பதவி மட்டுமே. ஆனால், அவர் அரசியல் சாசன சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.' - பழ.நெடுமாறன்

``அன்று ராஜபக்சேவை அமர வைத்தவர்கள்... இன்று வெளியேறச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்!" - பழ.நெடுமாறன்

`ஆளுநர் என்பது அலங்கார பதவி மட்டுமே. ஆனால், அவர் அரசியல் சாசன சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.' - பழ.நெடுமாறன்

Published:Updated:
பழ.நெடுமாறன் பத்திரிகையாளர் சந்திப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மீரா மஹாலில் தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் சுப.இளவரசன் தலைமையில் நடைபெற்ற தமிழக மக்கள் பண்பாட்டுக் கலை விழாவில், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டார்.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``ஆளுநர் அரசியல் சட்ட வரம்பை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் துறை பேராசிரியர்களை அழைத்து ஊட்டியில் தன்னிச்சையாக ஒரு மாநாடு நடத்துகிறார். இது முற்றிலும் தவறு. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக அரசுக்கும் இந்த மாநாட்டுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனத் தெரியவருகிறது. ஆளுநர் என்பது அலங்கார பதவி மட்டுமே. ஆனால், அவர் அரசியல் சாசன சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழர்  நீதிகட்சி
தமிழர் நீதிகட்சி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை இப்போது அனுமதித்தால் இதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும். இது தொடர்ந்தால் தமிழகத்தில் கல்வித் துறையில் ஆளுநர் தன்னிச்சையாக அதிகாரம் செலுத்தத் தொடங்குவார்.

பழ.நெடுமாறன் பத்திரிகையாளர் சந்திப்பு
பழ.நெடுமாறன் பத்திரிகையாளர் சந்திப்பு

இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சே சகோதரர்களை ஆட்சி பீடத்தில் உட்கார வைத்த அதே சிங்கள மக்கள், தற்போது அவர்களைப் பதவிகளிலிருந்து வெளியேற வேண்டும் என வற்புறுத்துகின்றனர்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism