Published:Updated:

`நான் யாரென்று மக்களுக்குத் தெரியும்!’ - `காணவில்லை’ புகார் குறித்து திருநாவுக்கரசர்

மணிமாறன்.இரா

``என்னைக் காணவில்லை என்று சிலர் பப்ளிசிட்டிக்காவும், பொழுது போக்கிற்காகவும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். திருநாவுக்கரசர் யாரென்று மக்களுக்குத் தெரியும்”

திருநாவுக்கரசர் 
திருநாவுக்கரசர் 

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``இந்தியா பல்வேறு மாநிலங்களைக் கொண்ட நாடு. இங்கு ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே சட்டம் என அனைத்தையும் மாற்றி இருப்பது மோடி ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. திடீர் பால் விலை உயர்வு பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநாவுக்கரசர் 
திருநாவுக்கரசர் 

பால் விலை உயர்வு கண்டனத்துக்குரியது. மத்திய அரசு ஒருபுறம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருகிறது என்றால், மறுபுறம் மாநில அரசும் விலைவாசியை உயர்த்தி மக்களுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறது. காங்கிரஸ் கட்சி குறித்து வைகோ விமர்சனம் செய்தபோது, இரு தரப்புக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரே கூட்டணியில் இருப்பதால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். அந்தப் பிரச்னை முடிந்தும்விட்டது. ஆனாலும், அந்தப் பிரச்னை தொடர்ந்து கிளப்பப்படுகிறது. சமாதானப்படுத்திய நிகழ்வைத் தி.முக தலைவர் அனைவரிடத்திலும் சொல்ல வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

`நான் யாரென்று மக்களுக்குத் தெரியும்!’ - `காணவில்லை’ புகார் குறித்து திருநாவுக்கரசர்
`எம்.பியைக் காணல; வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தார்!’ - போலீஸில் மனு கொடுத்த திருச்சி மக்கள்

`என்னைக் காணவில்லை' என்று சிலர் பப்ளிசிட்டிக்காவும், பொழுது போக்கிற்காகவும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். ஒருவாரமாக திருச்சியில்தான் இருக்கிறேன். என் கடமையை நான் சிறப்பாகச் செய்துகொண்டுதான் இருக்கிறேன். திருநாவுக்கரசர் யாரென்று மக்களுக்குத் தெரியும். அதனால்தான் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்" என்றார்.